பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட ஜனனி, பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுகிறார். அந்த வகையில் கடந்த வார இறுதியில் இலங்கையைச் சேர்ந்த ஜனனி வெளியேற்றப்பட்டார்.
ADK தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்ற வாசகத்தின் அடிப்படையில், ஜனனி வெளியேற்றப்பட்டார். இந்த ட்விஸ்ட் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இருப்பினும் அண்டை நாட்டிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஜனனி, 70 நாட்கள் தாக்குப் பிடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
பதான் படத்தை உங்கள் மகளுடன் பாருங்கள் - ஷாருக்கானுக்கு பாஜக சபாநாயகர் கிரீஷ் கெளதம் சவால்
View this post on Instagram
கடந்த வார இறுதியில் வெளியே வந்த ஜனனி, 'பிக் பாஸ் தமிழ் 6' இறுதி மேடையில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்புடன், "நான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது, என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி...!! உங்கள் வாக்குகளால் நீங்கள் அனைவரும் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்... இந்த நாட்களுக்குள் உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாமல் போயிருந்தால் மன்னிக்கவும். இந்த நிமிடம் முதல் என்னால் முடிந்தவரை உங்கள் அனைவரையும் எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன்..! மிக்க நன்றி!" என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 6, Vijay tv