26 வயசுல கல்யாணம் பண்ணிக்கனும், 30 வயசுல சோ ஸ்வீட் அம்மாவாகனும்னு பிக்பாஸ் ஜனனி சொன்ன எதிர்கால பிளான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெஷல் கிளீனிங் லீடராக இருப்பவர் ஜனனி. இந்நிலையில் நேற்று ஜனனி தனது எதிர்கால வாழ்க்கையில் பிளான் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் ஜனனி பேசியதாவது எனக்கு இப்போ 21 வயசு ஆகுது, 26 வயசுல ஒரு கல்யாணத்த பண்ணிடுவன், 27 வயசுல குழந்தை பெத்திக்கிட்டன்னா எனக்கு 30 வயசா இருக்கும் போது என் குழந்தைகளுடன் படிக்கும் அவரது நண்பர்கள் இதுவா உன் அம்மா, சோ சுவீட் என்று சொல்லும்படி இருப்பேன் என்று கூறினார். இதைக் கேட்ட ரபர்ட்டும் அமுதவானனும் சிரித்துக்கொண்டு இருந்தனர்.
😍😍😍
pic.twitter.com/Y77NUKyyiC
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 14, 2022
இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 6