தனது கணவரின் மரண செய்திக் கேட்டு பிக் பாஸ் வீட்டில் நடிகை கதறி அழுத காட்சி, பார்வையாளர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தற்போது மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் டப்பிங் ஆர்டிஸ்டும் குணச்சித்திர நடிகையுமான பாக்கியலட்சுமி போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ளார்.
Raashi Khanna: ராஷி கண்ணா தனது அண்ணனுக்கு செய்த ஹோலி பிராங்க் – க்யூட் வீடியோ!
10 வயதில் குழந்தை டப்பிங் ஆர்டிஸ்டாக சினிமாவில் நுழைந்த இவர், நடிகைகள் மேனகா, நதியா, அமலா, ஷோபனா, ரேவதி, ஊர்வசி, லிஸி, ரோகினி, ரம்யா கிருஷ்ணன், ரேகா, ஜோதிகா, நயன்தாரா, நித்யா மேனன் என பலருக்கும் மலையாளத்தில் டப்பிங் பேசியுள்ளார். அதோடு சிறந்த டப்பிங் கலைஞருக்கான கேரள மாநில விருதை 5 முறை வென்றிருக்கிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பாக்கியலட்சுமியை கன்ஃபெஷன் அறைக்கு வரும்படி அழைப்பு வந்தது. அங்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அவருடைய முன்னாள் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டதை பிக்பாஸ் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட பாக்கியலட்சுமி, உடைந்து அழுதுள்ளார்.
Enjoy Enjaami: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு பிரபலங்களின் அசத்தல் நடனம்! – வீடியோ
பின்னர் கணவரின் இறுதி சடங்கிற்கு செல்லப் போகிறார்களா? என பிக்பாஸ் கேட்டபோது, தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதால் இறுதிச்சடங்கில் பங்கேற்பதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் தனது மகன்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். இது குறித்து அவர்களிடம் போனில் பேச மட்டும் ஏற்பாடு செய்து தாருங்கள் என்ற பாக்கியலட்சுமியின் கோரிக்கையை பிக் பாஸ் கேட்டுக் கொண்டார்.
பின்னர் வெளியில் வந்த அவர், தனது கணவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும், மாற்று சிறுநீரகம் தான் தருவதாக சொன்ன போதும், ஈகோ காரணமாக அவர் அதை மறுத்து விட்டார் எனவும் அழுதுக் கொண்டே கூறினார். இந்த காட்சிகள் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்