முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நேத்து ராத்திரி எம்மா.. ஜிபி முத்து டான்ஸூக்கு அமுதவாணன் இப்படி சொல்லிட்டாரே!

நேத்து ராத்திரி எம்மா.. ஜிபி முத்து டான்ஸூக்கு அமுதவாணன் இப்படி சொல்லிட்டாரே!

ஜிபி முத்து

ஜிபி முத்து

“மேகம் கருக்குது” பாடலை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கோரஸாக பாட ஜிபி முத்து ஸ்டெப் போட்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக் பாஸ் சீசன் 6ல் 2வது நாளே ஃபுல் என்டர்டெயின்மென்டில் இறங்கி விட்டார் ஜிபி முத்து. கொட்டும் மழையில் இறங்கி ஆட்டம் போட்டவரை உச்ச நடிகருடன் வைத்து கமெண்ட் செய்தார் அமுதவாணன்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஜிபி முத்து வருகிறார் என்ற தகவல் பரவ தொடங்கிய நாளில் இருந்தே அவரின் ரசிகர்கள் இணையத்தில் ஆர்பரிக்க தொடங்கினர். டிக் டாக் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஜிபி முத்து பின்பு யூடியூப் பக்கம் வந்தார். அவரின் வெகுளித்தனமான பேச்சு ரசிகர்களை பெரிதும் கவர இன்று பிரபலமான யூடியூப்பராக வலம் வருகிறார். பிக் பாஸ் டி.ஆர்.பியை கூட்ட 6வது சீசனில் ஜிபி முத்துவை  வளைத்து போட்டது விஜய் டிவி.

ஈரோட்டை சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் தனலட்சுமி யார்? நடிப்பில் பிச்சு உதரும் அவரின் ரீல்ஸ் வீடியோவை பாருங்க..

அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. முதல் நாளே ஆட்டத்தை ஆரம்பித்தார் ஜிபி முத்து. கமலிடம் ஆதாமா? என ஜிபி முத்து கேட்டது இந்தியளவில் ட்ரெண்டானது. இப்படி இருக்கையில் பிக் பாஸ் ஹவுஸில் 2வது நாள் நேத்து ராத்திரி எம்மா, ஆசைய காத்துல தூது விட்டு பாடலுடன் களத்தில் இறங்கினார் ஜிபி முத்து. அவருடன் ஜோடி சேர்ந்து ஆடினார் மற்றொரு போட்டியாளர் தனலட்சுமி.

பிக் பாஸ் வீட்டில் மழை கொட்ட, ஒருபக்கம் தனலட்சுமி இறங்கி மழையில் நனைந்தார். அவருக்கு அடுத்து ஜிபி முத்துவும் நனைய, அமுதவாணன் மற்றும் ஹவுஸ்மேட்ஸ் பாட்டு பாட தொடங்கினர். மழை பெய்தால் எல்லோருக்கும் நினைவில் வரும் அதே பாட்டு தான் “மேகம் கருக்குது” பாடலை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கோரஸாக பாட ஜிபி முத்து ஸ்டெப் போட்டார். இந்த பக்கம் தனலட்சுமியும் ஆடினார். உடனே அமுதவாணன் , ”பெரிய விஜய் - ஜோதிகா-ன்னு நெனப்பு” என்றார். ( கில்லி முத்துபாண்டி - த்ரிஷா-ன்னு சொல்லி இருக்க கூடாதா? பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி இருக்கும்)

' isDesktop="true" id="817081" youtubeid="ubrBGG_fJq8" category="television">

அடுத்து நேத்து ராத்திரி எம்மா,ஆசைய காத்துல தூது விட்டு என  பாடல்கள் லிஸ்டில் வர தனலட்சுமி ஐயோ, அம்மா என சைலண்ட் மோடில் சென்றார். ஆனால் தலைவர் ஜிபி முத்து அதிலும் ஸ்கோர் செய்தார். பிக் பாஸ் 5க்கு ராஜூ போல பிக் பாஸ் 6க்கு ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் கிடைத்து விட்டார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv