• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • ஒரு முக்கியமான வேலை... அவசரமாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் 2 பிரபலங்கள்!

ஒரு முக்கியமான வேலை... அவசரமாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் 2 பிரபலங்கள்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

பிக்பாஸ் சீசன் 5-ல் இரண்டு திரை பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

 • Share this:
  நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகிய இருவர் தான். "ஓ மணப்பெண்ணே" திரைப்பட விளம்பரத்திற்காக அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

  ஸ்டார் விஜய் டிவி-யில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த சில எபிசோட்களாக சூடுபிடிக்க துவங்கி இருக்கிறது. 4 சீசன்களும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி பிக்பாஸின் 5-ஆம் சீசன் உற்சாகமாக துவங்கியது. இந்த சீசன் மொத்தம் 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. இசை வாணி, ராஜு, மதுமிதா, யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்டோருடன் பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பமானது.

  இதில் எலிமினேஷன் நடைமுறைகள் துவங்குவதற்கு முன்பாகவே போட்டியில் பங்கேற்று இருந்த நமிதா மாரிமுத்து திடீரென்று தானாகவே வெளியேறினார். இதற்கான உண்மையான காரணம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் சேனல் நிர்வாகம் கூறுவது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறிவிட்டார் என்பதே. தொடர்ந்து 17 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் மலேசிய தமிழரான நாடியா சாங் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்.

  வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வரவேற்பை அதிகரிக்க ஒவ்வொரு சீசனிலும் சில வெளிநாட்டு வாழ் தமிழ் போட்டியாளர்கள் பிக் பாஸில் பங்கேற்க வைக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மலேசியாவில் சீரியல் மற்றும் மாடலிங்கில் பிஸியாக இருந்து வரும் நாடியா சாங் நடப்பாண்டு பிக்பாஸில் பங்கேற்று இருந்தார். இவர் போட்டியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளுக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை, மேலும் இவரது வாழ்க்கை கதை அவ்வளவாக ஈர்க்கவில்லை போன்ற பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தது. எவிக்ஷன் பட்டியலில் பலர் இருந்த நிலையில் மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் ஐக்கி மற்றும் நாடியா சாங் ஆகியோர் வெளியேற்றப்படுவதற்கான லிஸ்ட்டில் அடுத்தடுத்து இருந்ததாக தெரிகிறது. இறுதியில் போட்டியில் இருந்து முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் நாடியா சாங்.

  அடி வாங்காத ஏரியாவே இல்லை போல.. ஹவுஸ்மேட்ஸின் வெறுப்பை சம்பாதிக்கும் அபிஷேக்!

  தற்போது மொத்தம் 16 போட்டியாளர்களுடன் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 5-ல் இரண்டு திரை பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய இயக்குனரான கார்த்திக் சந்தர் இயக்கத்தில் தயாராகி உள்ள திரைப்படம் "ஓ மணப்பெண்ணே". இந்த திரைப்படம் விரைவில் ஹாட் ஸ்டாரில் ரிலீஸாக இருக்கிறது. எனவே இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக இதில் நடித்துள்ள பிரபல ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆகிய இருவரும் விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த திரைபிரபலங்கள் வேறு யாருமல்ல நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகிய இருவர் தான். "ஓ மணப்பெண்ணே" திரைப்பட விளம்பரத்திற்காக அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் வரும் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: