யுத்தகளமா மாறப்போகுது பிக்பாஸ் வீடு - சாண்டி

Web Desk | news18
Updated: June 26, 2019, 11:50 AM IST
யுத்தகளமா மாறப்போகுது பிக்பாஸ் வீடு - சாண்டி
நடன இயக்குநர் சாண்டி
Web Desk | news18
Updated: June 26, 2019, 11:50 AM IST
பிக்பாஸ் வீடு விரைவில் யுத்தகளமாக மாறும் என்று நடன இயக்குநர் சாண்டி தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

முதல் நாள் நிகழ்ச்சியில் அபிராமி கவின் மீது ஈர்ப்பும், காதலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் 2-வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் புரமோ வீடியோ ஒன்றை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

அதில் பேசியுள்ள சாண்டி, “ஜாலியாக இருக்கும் பிக்பாஸ் வீடு அடுத்த வாரத்திலிருந்து யுத்தகளமாக மாறும் என்று நினைக்கிறேன். அந்த யுத்தகளத்தில் நானும் இருப்பேன் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார் சாண்டி.

நடன இயக்குநர் சாண்டி தனது நடவடிக்கைகளின் மூலம் கடந்த சீசனில் பங்கேற்ற டேனியலை நினைவுபடுத்துகிறார். வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்து வின்னராக வெளியில் வருவாரா? அல்லது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளில் சிக்கி பாதியில் வெளியேறுவாரா என்பதை வரும் வாரங்களே தீர்மானிக்கும்.

Loading...பிக்பாஸ் தொடர்பான தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...