ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸில் இருந்து வெளியே வந்தும் மாஸ் காட்டும் ஜி.பி முத்து! யாரை சந்தித்தார் தெரியுமா?

பிக் பாஸில் இருந்து வெளியே வந்தும் மாஸ் காட்டும் ஜி.பி முத்து! யாரை சந்தித்தார் தெரியுமா?

ஜிபி முத்து

ஜிபி முத்து

பிக் பாஸ் ஷோவுக்கு பின்பு ஜிபி முத்து குறித்து தினம் ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தும் மாஸ் காட்டி வருகிறார் யூடியூப்பர் ஜிபி முத்து. சமீபத்தில் அவர் பிக் பாஸ் 6 போட்டியாளர் ஒருவரை நேரில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

  யூடியூப்பர் டூ பிக் பாஸ் பிரபலம், நடிகர் என கெத்து காட்டி வரும் ஜிபி முத்துவுக்கு நாளுக்கு நாள் ஃபேன்ஸ் கூட்டம் பெருகியப்படியே உள்ளது. ஆரம்பத்தில் இவரின் பேச்சுக்கும்  காமெடிக்கும் ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவை பார்த்த பின்பு அவரின் குணத்தையும், வெகுளியான மனசையும் ரசிகர்கள் தூக்கி கொண்டாட தொடங்கி விட்டனர். ஜிபி முத்து சன்னிலியோனுடன் சேர்ந்து நடித்து இருக்கும் OMG படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெ0ற்றது.

  அப்போது ரசிகர்களின் ஆரவார கைத்தட்டலுடன் ஜிபி முத்து மேடை ஏறினார். சன்னி லியோனுக்கு பால்கோவாவும் ஊட்டி விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து ஜிபி முத்துக்கு  பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 6ல் ஜிபி முத்துவை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் பிக் பாஸ் ஷோவுக்கு பின்பு ஜிபி முத்து குறித்து தினம் ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

  சாந்தி மாஸ்டருடன் ஜிபி முத்து

  அந்த வகையில் சமீபத்தில் ஜிபி முத்து பிக் பாஸ் 6 போட்டியாளர் சாந்தி மாஸ்டரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார். இவர்கள் இருவரின் சந்திப்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை போன வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அசல் கோலாரிடமும் ஜிபி முத்து ஃபோனில் பேசி இருக்கிறார். இதை அசல் கோலார் பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv