Bigg Boss: தனுஷுடன் பிக் பாஸ் பிரபலம் - வைரலாகும் குழந்தைப் பருவ படம்!

தனுஷுடன் கேபி

கிட்டத்தட்ட முழு நாட்களையும் பூர்த்தி செய்த அவர், 102 வது நாளில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸை விட்டு வெளியேறினார்.

  • Share this:
    நடிகர் தனுஷுடன் பிக் பாஸ் பிரபலம் இருக்கும் அவரது குழந்தைப்பருவ படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் கேப்ரியெல்லா சார்ல்டன் முக்கியப் போட்டியாளராக இருந்தார். கிட்டத்தட்ட முழு நாட்களையும் பூர்த்தி செய்த அவர், 102 வது நாளில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் பிக் பாஸை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களின் தனிப்பட்ட விழாக்களில் கலந்துக் கொள்வதை பார்க்க முடிகிறது.

    Cook With Comali: குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!

    Bigg Boss Gabriella Charlton childhood picture with dhanush and aishwarya dhanush
    தனுஷுடன் கேபி


    இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோருடன் பத்து வயது கேபி இருக்கும் த்ரோபேக் படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அவரது முதல் திரைப்படமான '3' படப்பிடிப்பின் போது இந்தப் படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் தனுஷ் ஹீரோவாகவும், ஐஸ்வர்யா இயக்குநராகவும் இடம்பெற்றிருந்தார்கள்.

    '3' படத்தில் கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தங்கை வேடத்தில் கேப்ரியல்லா நடித்தார். பின்னர் அவர் 'என்றென்றும் புன்னகை', 'சென்னையில் ஓரு நாள்' மற்றும் 'அப்பா' போன்ற படங்களில் நடித்தார். தற்போது படங்களிலும், தொலைக்காட்சியிலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: