ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகையின் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பு - ஓட்டம் பிடித்த முதியவர்கள்!

நடிகையின் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பு - ஓட்டம் பிடித்த முதியவர்கள்!

பாத்திமா பாபு

பாத்திமா பாபு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அந்த வீட்டிற்குள் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக பிடித்து சென்றனர்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ் சின்னத்திரையில் தோன்றி பிரபலமாகும் பலரும் வெள்ளித்திரைக்கும் சென்று நடிப்பில் முத்திரை பதித்து வருகின்றனர். அதிலும் ஸ்டார் விஜய் டிவி-யின் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் பலருக்கு அதற்கு பிறகு சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைப்பது வழக்கமாக இருக்கிறது. எனினும் தற்போது போல பல வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் டெலிகாஸ்ட் செய்யப்படாத சின்னத்திரை கால கட்டம் தான் துவக்கத்தில் இருந்தது.

  அப்போதே தனது அழகான வாரத்தை உச்சரிப்பு மற்றும் தோற்றத்தால் தமிழ் டிவி ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் தான் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு. வித்தியாசமான ஸ்டைலில் வார்த்தைகளை உச்சரித்து பிரபலமான செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமிக்கு எப்படி ரசிகர்கள் வட்டம் உண்டோ, அதே போல தனது அழுத்தம் திருத்தமான தமிழ் வார்த்தை உச்சரிப்பால் எண்ணற்ற டிவி ரசிகர்களை கொண்டிருந்தவர் பாத்திமா பாபு.

  துவக்கத்தில் தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக தொழில் வாழ்க்கையை துவங்கிய இவரின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், அழகும் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. தூர்தர்ஷனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக மாறினார். இவர் 1964ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் என்றாலும் வளர்ந்தது முழுவதும் புதுவையில் தான். செய்து வாசிப்பாளராக மட்டுமே இருந்த பாத்திமா பாபுவை ஒரு நடிகையாக மாற்றியவர் இயக்குனர் கே.பாலசந்தர் ஆவார்.

  கடந்த 1996-ல் வெளியான கல்கி திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் பாசமுள்ள பாண்டியர், நேருக்கு ஏர், விஐபி என தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து ஒரே நேரத்தில் செய்தி வாசிப்பாளராகவும், நடிகையாகவும் ஜொலித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

  இதையும் படிங்க.. மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

  திரைப்படங்களை தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸின் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றார். சென்னை போரூரில் ஐயப்பன்தாங்கல் பகுதியில் நடிகை பாத்திமா பாபு குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

  இதே பகுதியில் இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு ஒன்றும் உள்ளது. அந்த வீட்டை முதியோர் இல்லமாக நடத்தி வருகிறார் பாத்திமா பாபு. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் பாத்திமா பாபுவின் வீட்டில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதியவர்கள் தங்கி இருக்கும் பாத்திமா பாபுவின் வீட்டில் நேற்று முன்தினம் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

  இதையும் படிங்க.. அமீர் - பாவ்னி உறவை பற்றி பேசி சண்டையில் சிக்கிய பிரியங்கா!

  இதனை கண்ட முதியவர்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அந்த வீட்டிற்குள் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து நடிகை பாத்திமா பாபு மற்றும் அந்த வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் நிம்மதி அடைந்தனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV actress, Vijay tv