Home /News /entertainment /

சன் டிவி-யின் ஹிட் சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

சன் டிவி-யின் ஹிட் சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை சுஜா

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்து உள்ள நிலையில் இரவு 9.30 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் அன்பே வா சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த 2020 நவம்பர் 2-ம் தேதி முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் பூமிகா கேரக்டரில் நடிகை டெல்னா டேவிஸ் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கர்நாடகாவை சேர்ந்த விராட், வருண் என்ற கேரக்டரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

    இவர்களை தவிர நந்தன் லோகநாதன், பிர்லா பாஸ், வினயா பிரசாத், அகிரா, கன்யா பாரதி, ராஜலட்சுமி, பூஜா ஃபியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ராஜாஸ்ரீ என் ராய் திரைக்கதையில், ரதி பாலா வசனத்தில், சிவா எம்பி இயக்கத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அன்பே வா சீரியல் பல திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பு நிறைந்த எபிசோட்கள் மூலம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

    இந்த சீரியலை விறுவிறுப்பாக்கும் வகையில் பல புதிய கேரக்டர்கள் அவ்வப்போது சீரியலில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸில் பங்கேற்ற பெண் பிரபலம் ஒருவர் சன் டிவி-யின் ஹிட் சீரியலான அன்பே வா-வில், இணைந்து உள்ளார். 2002-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை சுஜா வருணி. பிளஸ் 2 என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் சுஜா வருணி.

    பல திரைப்படங்களில் குத்து பாடல்களுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் மிளகா படத்தின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் திலகம் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு குழந்தை ஒன்று உள்ளது. தற்போது நடிகை சுஜா வருணி தான் அன்பே வா சீரியலில் இணைந்து உள்ளார்.

    கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை சுஜா வருணி, திருமணத்திற்கு பிறகு வெள்ளித்திரையில் தோன்றாமல் இருந்தார். எனினும் இன்ஸ்டா, யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் ரசிகர்களை சந்தித்து வந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)






    கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். பல நாளாக ஸ்கிரீனில் தோன்றாமல் இருந்த சுஜா வாருணி தற்போது பிரபல ஹிட் சீரியலான அன்பே வா-வில் இணைந்து இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அவர் சீரியலில் தோன்றும் சீன்கள் அடங்கிய ப்ரமோ வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Suja varunee

    அடுத்த செய்தி