• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கும் ஃபோட்டோவை ஷேர் செய்த பிக்பாஸ் கேபி!

கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கும் ஃபோட்டோவை ஷேர் செய்த பிக்பாஸ் கேபி!

கேப்ரியெல்லா சார்ல்டன்

கேப்ரியெல்லா சார்ல்டன்

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்  நடிகை கேப்ரியெல்லா. இன்ஸ்டாவில் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யின் நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறும் பலர், இதற்கு முன்இல்லாத அளவு பிரபலமடைவது வழக்கமான ஒன்றாகி விட்டது. தமிழ் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த முன்னணி பிரபல சேனல்களில் முக்கியமான ஒரு டிவி சேனலாக இருந்து கொண்டிருக்கிறது ஸ்டார் விஜய் டிவி. விரைவில் பிக்பாஸ் சீசன் ஒளிபரப்பாக உள்ள நிலையில், பிக்பாஸ் சீசன் 4-ன் போட்டியாளராக பங்கேற்றவர் தான் இளம் நடிகை கேப்ரியெல்லா. இவர் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்கும் முன் விஜய் டிவில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் டான்ஸ் ஷோவில் தனது 9-வது வயதில் பங்கேற்று தனது நடன திறமையால் வெற்றி பெற்றார். இதன் மூலம் 9 வயதிலேயே சின்னத்திரையில் வெற்றியுடன் அறிமுகமானார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் கேப்ரியெல்லா. இவரின் முழு பெயர் கேப்ரியெல்லா நடாலி சார்ல்டன். இவரை ’கேப்ரி’, ’கேப்பி’ என்ற புனைப்பெயரில் சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இவர் தனது பள்ளிப்படிப்பை புனித ஜான்ஸ்மெய்ஸ்டின் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை சென்னை நேஷனல் கல்லூரியிலும் முடித்தார். சின்னத்திரையில் அறிமுகமான பின்னர் 2021-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இந்த படத்தில் சுருதி ஹாசனின்தங்கை சுமியாக நடித்திருந்தார் இவர். பின்னர் சென்னையில் ஒரு நாள் படத்தில் ரியாவாகவும், சமுத்திரகனியின் அப்பா திரைப்படத்தில் ரஷிதா பானுவாகவும் நடித்து ரசிகர்களிடையே பரிச்சயமானார். சின்னத்திரையில் விஜய் டிவி-யின் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றதுடன், அதே சேனலில் ஒளிபரப்பான 7 சி சீரியலில் நடித்தார். சின்னத்திரை மற்றும் சீரியல் என மாறி மாறி நடித்து வந்த போதும் கிடைக்காத ஒரு புகழ் மற்றும் பிரபலம் பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்றதன் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.

Also read... சூப்பர் சிங்கர் 8 டைட்டில் வின்னர் ஸ்ரீதர் சேனா -இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு நன்றி!

இதனை தொடர்ந்து இவருக்கான ரசிகர் வட்டம் பெருகி உள்ளது. சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்  நடிகை கேப்ரியெல்லா. இன்ஸ்டாவில் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். சமீபத்தில் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் எடுத்த தனது ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Gaby (@gabriellacharlton_)






அவரது இந்த ஃபோட்டோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ் செய்துள்ளனர். இந்த ஃபோட்டோவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வரும் நிலையில், அறந்தாங்கி நிஷா "அட அட என்ன ஒரு அழகு" என்று கூறி இருக்கிறார், அதற்கு கேப்ரி "உங்களவுக்கெல்லாம் இல்ல அக்கா" என்று ஹார்ட்டினுடன் பதில் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: