• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கார் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி

கார் விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி

அர்ஷி கான்

அர்ஷி கான்

சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11-வது சீசனில் பங்கேற்று, பின்னர் 14-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராகவும் பங்கேற்றார் அர்ஷி கான்.

  • Share this:
    கார் விபத்தில் சிக்கிய பிக் பாஸ் பிரபலம் தற்போது மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ-வான பிக்பாஸ் 11-வது சீசனில் பங்கேற்ற பிரபல மாடலும் நடிகையுமான அர்ஷி கான், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    டெல்லியில் உள்ள மாள்வியா நகர் அருகே விபத்து நடந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. “அர்ஷி காரில் இருந்த போது, டெல்லியில் உள்ள ஷிவாலிக் சாலை, மாளவியா நகர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இதையடுத்து நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று பிரபல ஆங்கில ஊடகத்தில் மேற்கோள் காட்டப்பட்டது. அர்ஷி கானின் குடும்பத்தினர் பின்னர் இதனை செய்தி இணையதளத்தில் உறுதிப்படுத்தினர். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11-வது சீசனில் பங்கேற்று, பின்னர் 14-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராகவும் பங்கேற்றார் அர்ஷி கான்.

    தவிர “அக்டோபரில் எனக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. அவர் என் தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பிறகு, அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கும். அதனால் என் பெற்றோர் எனக்கொரு இந்திய பார்ட்னரை தேடி தருவார்கள்” என கடந்த ஆகஸ்டில் அர்ஷி கான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: