பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி, கடந்த 5 வருடமாக வெற்றிகரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் டெலிகாஸ்ட் செய்து வருகிறது.மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காட்டிலும் பிக் பாஸ் ஷோவின் டி.ஆர்.பி எப்போதும் அதிகமாகவே இருக்கும் இதை அப்படியே தக்க வைத்துக் கொள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த நிலையில்,'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.
முல்லை – கதிர் விஷயத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!
இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிகழ்ச்சியில் சினேகன் அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கிய மிக சில நாட்களிலேயே ஏராளமான சண்டைகள் அவர்களுக்குள் தொடங்கியது. இதுவரை சுரேஷ் தாத்தா, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் , பாலாஜி, சினேகன், அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறினர். வனிதா விஜயகுமார் தானாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவரின் வெளியேற்றதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கிய கம்லஹாசனும் நேரமின்மை காரணமாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்க போவதில்லை என கூறி ரசிகர்களுக்கு ஷாக் தந்தார்.
இதையும் படிங்க.. மாதம் ரூ. 5000 சேமித்தால் ரூ. 40,000க்கு மேல் பென்சன் கிடைக்கும்! எப்படி தெரியுமா?
அவருக்கு பிறகு தற்போதுநடிகர் சிம்பு தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அவருடைய ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதில் சுரேஷ் தாத்தாவுக்கு மட்டும் வைல்டு கார்டு என்ட்ரியில் 2வது வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் 2 தினங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் வாக் அவுட் செய்தார். இப்போது வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்து இருப்பவர்கள் விஜய் டிவி சதீஷ், ரம்யா பாண்டியன், தீனா மற்றும் சாண்டி மாஸ்டர்,இதில் சதீஷ் இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் இருக்கிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது அதாவது வழக்கம் போல் அதிக ஓட்டுகள் பெற்று பாலா முதலிடத்தில் இருக்கிறாராம். ஆனால் கடைசி 2 இடத்தில் சதீஷ் மற்றும் அபிராமி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 2 பேரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது உண்மையா? இல்லையா? என்பது நாளை தெரிந்து விடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.