Home /News /entertainment /

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்? வெளியான தகவல்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்? வெளியான தகவல்!

பிக் பாஸ் எவிக்‌ஷன்

பிக் பாஸ் எவிக்‌ஷன்

பிக் பாஸ் நாமினேஷன் பட்டியலில் தாமரை மற்றும் அக்ஷரா உள்ளிட்ட பெண் போட்டியாளர்களைத் தவிர்த்து, இமான் அண்ணாச்சி, சிபி, அமீர், நிரூப் மற்றும் அபினை ஆகியோர் உள்ளனர்

    பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் 10வது வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை எட்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    மலேசியாவிலிருந்து பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்து கொண்ட போட்டியாளர் நாடியா சாங் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். அபிஷேக் ராஜா இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, மற்றும் ஐக்கி பெர்ரி என்று அடுத்தடுத்து பெண்களே வெளியேறினார்கள்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் வெளியேறிய ஒரே ஆண் போட்டியாளரான அபிஷேக் ராஜாவும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மீண்டும் வந்தார். ஆனால், அவர் இரண்டாவது முறையாக இரண்டே வாரத்தில் மறுபடியும் வெளியேற்றப்பட்டு விட்டார். இதுவரை அபிஷேக் ராஜாவைத் தவிர்த்து பிக்பாஸில் எந்த ஆண் போட்டியாளரும் எலிமினேட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது நான்கு பெண் போட்டியாளர்களுடன் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிச்சயமாக ஒரு ஆண் போட்டியாளர் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

    இந்தவார நாமினேஷன் பட்டியலில் தாமரை மற்றும் அக்ஷரா உள்ளிட்ட பெண் போட்டியாளர்களைத் தவிர்த்து, இமான் அண்ணாச்சி, சிபி, அமீர், நிரூப் மற்றும் அபினை ஆகியோர் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகும் போட்டியாளர் யாராக இருக்கும் என்று சோஷியல் மீடியாவில் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    நாமினேஷன் பட்டியல் அறிவிக்கப்பட்ட உடனேயே, நாணயத்தின் பவரை பயன்படுத்த விரும்பிய நிரூப், தனக்கு பதிலாக சஞ்சீவை தேர்ந்தெடுத்தார். ஆனால் சஞ்சீவுடன் போட்டியிட வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். ஆனால்  அந்த போட்டியில் சஞ்சீவ் வெற்றி பெற்றதால், நிரூப் நாமினேஷனில் இருப்பார் என பிக் பாஸ் அறிவித்தார்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மிகவும் சிறப்பான போட்டியாளராக காணப்பட்ட நிரூப் கடந்த சில வாரங்களாக நிகழ்ச்சியில் இருக்கிறாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை. எனினும் நிரூப் வெளியேறுவதற்கு சாத்தியம் குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. இமான் அண்ணாச்சி அல்லது அபினய் ஆகிய இருவரில் ஒருவர்தான் இந்த வாரம் வெளியேறப் போவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக அண்ணாச்சியின் நடவடிக்கைகள் மீது பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முதல் வாரத்தில் இருந்தே அபினய் தொடர்ந்து வெளியேற்ற பட்டியலில் இருந்து தப்பித்துக் கொண்டே வருகிறார் என்ற காரணத்தால் அவர் வெளியேறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக காணப்படுகிறது.

    அபினை கேப்டனாக இருந்த ஒருவாரம் தவிர்த்து, நாமினேஷன் தொடங்கப்பட்ட முதல் வாரம் முதல் இந்த வாரம் வரை எல்லா வாரங்களிலும் சக போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்ய நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஒவ்வொரு வாரமும் மக்களால் காப்பாற்றப்பட்டு வருகிறார்.

    நாமினேஷன் பட்டியலை பிக்பாஸ் அறிவிக்கும் போதே, போட்டியாளர்களின் பெயர்களை அறிவித்த பின் ‘மற்றும் அபினை’ என்று கூறி வருவது வேடிக்கையாகிவிட்டது. அபினை மீண்டும் மக்களால் காப்பாற்றப்படுவாரா அல்லது பிக்பாஸ் விட்டு வெளியேறுவாரா? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. வார இறுதி எபிசோடுகளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன, இந்த வாரம் வெளியேற்றப்படுவது யார் என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி