Home /News /entertainment /

பிக் பாஸை விட்டு வெளியேறினாரா அண்ணாச்சி? இது என்ன புது ட்விஸ்ட்!

பிக் பாஸை விட்டு வெளியேறினாரா அண்ணாச்சி? இது என்ன புது ட்விஸ்ட்!

பிக் பாஸ் 5 அண்ணாச்சி

பிக் பாஸ் 5 அண்ணாச்சி

நிரூப் அல்லது அபினய் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் அண்ணாச்சி பிக் பாஸ் கேமை விட்டு வெளியேறியதாக தகவல்கள் பரவி வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் சீசன் 5ல் இந்த வாரம் வீட்டில் இருந்து இமான் அண்ணாச்சி வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இந்த சீசன் ஆரம்பத்தில் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. பிரியங்கா, ராஜூ, பாவனி போன்ற விஜய் டிவி பிரபலங்களை தவிர்த்து மற்ற எல்லோரும் புதுமுகங்கள், மாடல்களாக இருந்ததால் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் குறைந்தது.

    உள்ளே வந்த ஒருவாரத்தில் அந்த குறையை தீர்த்து வைத்தார் சினிமா பையன் அபிஷேக் ராஜா. அவருடன் கைக்கோர்த்து தாமரையும் ஒருபக்கம் டி.ஆர்.பியை எகிற வைத்தார். மெல்ல மெல்ல ஷோ சூடுப்பிடிக்க வழக்கம் போல் தினமும் இரவு 10 மணிக்கு ரசிகர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க தொடங்கினர். இந்நிலையில் 2 ஆவது வாரமே இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். கொரோனா தொற்றால் கமல் பாதிக்கப்பட்டிருந்த போது ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையே அபிஷேக், அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

    கொரோனோவிலிருந்து குணமடைந்த கமல், மீண்டும் பிக் பாஸ் செட்டுக்கு திரும்பினார். இதையடுத்து இரண்டாவது முறையாக கடந்த ஞாயிற்று கிழமை, அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரம் முழுவதும் வீட்டில் நடந்த டாஸ்குகள் அதனால் ஏற்பட்ட சண்டைகள், பாவனி விவகாரம் என பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பயணித்தது. இந்நிலையில் இந்த வாரம் எவிக்‌ஷன் பட்டியலில் வருண், பிரியங்கா, ராஜூ, சஞ்சீவ் தவிர்த்து மற்ற அனைவரும் உள்ளனர். இதில் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்ப்பு நேற்று முதலே மேலோங்கியது.

    இந்நிலையில் இந்த வாரம் இமான் அண்ணாச்சி குறைந்த வாக்குகள் பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல யூடியூப் வலைத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதே போல் அண்ணாச்சி வெளியேற்றம் பற்றி சமூகவலைத்தளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன ஆனால் இதுக் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த வாரம் நிரூப் அல்லது அபினய் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் அண்ணாச்சி பிக் பாஸ் கேமை விட்டு வெளியேறியதாக தகவல்கள் பரவி வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி