பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அடுத்த வாரம், ஃபினாலே வாரம். முதலில் 6 வாரம் மட்டுமே ஒளிபரப்பு என்று தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட், பின்னர் 7 வாரம் என்று மாறியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, 10 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது 9 ஆம் வாரத்தில் இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாஜி, நிரூப், தாமரைச் செல்வி, ஜூலி, ரம்யா பாண்டியன், அபிராமி ஆகியோர் உள்ளனர். ஸ்ருதி பெரியசாமி ரூ. 15 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட்டின் இறுதிப் போட்டி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்று உறுதியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி, ஞாயிறு அன்று, அதாவது ஏப்ரல் 10 அன்று ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் அல்டிமேட்டின் வெற்றியாளர் யார்? என்ற தகவல் ஏற்கெனவே இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் பாலாஜி முருகதாஸ் பெயர் தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் கடைசி நேர ட்விஸ்டாக எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பது தான் உண்மை.
இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை அதன் போட்டியாளர்கள் தான் மிகப்பெரிய அட்ராக்ஷனாக இருந்து வருகிறார்கள். ஒவ்வொருவர் மீதும் ஏகப்பட்ட பாசிடிவ் நெகட்டிவ் கமெண்டுகள் உள்ளனர். இதை பொறுத்தே அவர்களின் ஒட்டு எண்ணிகை அமைகிறது.இப்படி இருக்கையில் 9 வது வாரத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது யார்? என்ற தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இதுவரை பதிவான வாக்குகள் அடிப்படையில் அபிராமி குறைவான வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளார். எனவே அவர் எவிக்ட் ஆக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம், டபுள் எவிக்ஷன நடந்தால் அவருடன் சேர்த்து ரம்யா பாண்டியன் வெளியேற கூடும் என தகவல்கள் கசிந்து வருகின்றன. இதன் உண்மை நிலவரம் நாளை எபிசோடு மூலம் தான் நமக்கு தெரிய வரும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.