• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் 5 : தீர்ப்பு இன்று இரவே தெரிந்துவிடும்... கமல் சொல்லும் சூசகம்!

பிக் பாஸ் 5 : தீர்ப்பு இன்று இரவே தெரிந்துவிடும்... கமல் சொல்லும் சூசகம்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

மக்களிடையே பிரியங்கா, ராஜூக்கு அதிகளவில் வரவேற்பு இருக்கிறது

  • Share this:
    பிக் பாஸ் 5 இல்லத்தில் முதல் போட்டியாளராக நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்ல போவது யார்? என்ற கேள்விக்கு இன்றே விடை கிடைக்கும் என்கிறார் கமல்ஹாசன்.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கிய நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.இதில் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி போட்டியாளர்களுக்கு பாய்ண்ட்ஸ்கள் வழங்கப்படுகிறது.

    நேற்று இரவு ஒளிப்பரப்பான எபிசோடு வரை இசைவாணி, சின்னப்பொண்ணு, இமான், பாவ்னி, ஐக்கி, மதுமிதா, ஸ்ருதி, நமீதா என 17 போட்டியாளர்களும் கதை சொல்லி முடித்துவிட்டனர். 2 ஆவது டாஸ்க்காக நாடகமும் நேற்றுடன் முடிந்துவிட்டது. இந்நிலையில் வார இறுதியான இன்று கமல்ஹாசனுடன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் எபிசோடு ஒளிப்பரப்பாகும். இந்த 2 நாட்களில் 17 போட்டியாளர்களில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார்.

    நிரூப் - பிரியங்கா பெஸ்டி டார்ச்சர்...கேமராவை பார்த்ததும் நடிக்க தொடங்கிய பிரியங்கா!

    தற்போது எவிக்‌ஷன் லிஸ்டில் தலைவர் தாமரை செல்வி மற்றும் பாவனி தவிர மற்ற 15 போட்டியாளர்களும் உள்ளனர். எனவே இதில் யாரேனும் ஒருவர் வெளியேற வாய்ப்பு உள்ளது. வீட்டில் 8 ஓட்டுகள் வாங்கி லீடிங்கில் இருப்பவர் இசைவாணி தான். ஆனால் அவர் இந்த வாரம் மக்களால் காப்பாற்றப்படுவார் என  தெரிகிறது. முதல் ஆளாக வீட்டுக்குள் சென்றவரும் அவர் தான். இந்நிலையில் மக்களிடையே பிரியங்கா, ராஜூக்கு அதிகளவி வரவேற்பு இருக்கிறது. எனவே இவர்களும் வெளியேற வாய்ப்பு இல்லை.
    வயதில் மூத்தவராக இருக்கும் சின்ன பொண்ணு அல்லது அதிகம் பரீட்சையம் இல்லாத முகமாக இருக்கும் நாடியா என இருவரில் யாரேனும் ஒருவர் வெளியே செல்வார்கள் என தெரிகிறது.



    அதுக்குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்வது யார்? என்ற கேள்விக்கான விடை இன்றே கிடைத்துவிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதிலும் இன்றே என்ற வார்த்தையை அழுத்தி குறிப்பிட்டு சூசகமாக ஏதோ ஒன்றை சொல்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: