ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss: போர்வைக்குள் ரொமான்ஸ் முத்தமிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்!

Bigg Boss: போர்வைக்குள் ரொமான்ஸ் முத்தமிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் தெலுங்கு 6

பிக் பாஸ் தெலுங்கு 6

சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போர்வைக்குள் முத்தமிட்டுக் கொண்ட பிக் பாஸ் போட்டியாளர்களின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

  கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சி, ஜி.பி.முத்து மற்றும் சாந்தியின் வெளியேற்றத்திற்குப் பிறகு மூன்றாவது வாரத்தில் சுவாரஸ்யமாகி வருகிறது. மீதமுள்ள 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் டைட்டிலுக்காக வீட்டில் போராடி வருகிறார்கள். இதற்கிடையில், 'பிக் பாஸ் தெலுங்கு' சீசன் 6, செப்டம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது. இதில் கலந்துக் கொண்ட 21 போட்டியாளர்களில் 7 பேர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். இப்போது டைட்டிலுக்காக மீதமுள்ள 14 பேர் சண்டையிட்டு வருகிறார்கள்.

  இந்நிலையில், போட்டியாளர்களான மெரினா ஆபிரகாமும், ரோஹித் சாஹ்னியும் போர்வைக்குள் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்ற பிரபலங்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாலும், இந்த ஜோடி 2017-ல் திருமணம் செய்து கொண்டதால் இது இயற்கையானது என எளிதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

  சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தெலுங்கு 6' நிகழ்ச்சி, 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு இவர்கள் இணைந்து பங்கேற்கும் இரண்டாவது ரியாலிட்டி ஷோ.

  த பாஸ் ரிட்டர்ன்ஸ்... விஜய்யின் வாரிசு ஹெச்.டி ஸ்டில்ஸ்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  'பிக் பாஸ் தமிழ் 6' நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, அசால் கோலருக்கும் நிவாஷினிக்கும் இடையே காதல் உருவாகி வருவதாகத் தெரிகிறது. இதுவரை கடந்த ஐந்து சீசன்களில் பிக் பாஸ் காதலர்கள் இடையே முத்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இந்த சீசனில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6