மோசடி வழக்கில் பிக்பாஸ் மீரா மிதுனுக்கு முன் ஜாமின்!

தொழில் போட்டி காரணமாக, தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் எனவும் மீராமிதுன் கோரிக்கை நீதிமன்றத்தில் விடுத்துள்ளார்

News18 Tamil
Updated: July 18, 2019, 9:17 PM IST
மோசடி வழக்கில் பிக்பாஸ் மீரா மிதுனுக்கு முன் ஜாமின்!
பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன்
News18 Tamil
Updated: July 18, 2019, 9:17 PM IST
மோசடி புகாரில் பிக்பாஸ் பங்கேற்பாளர் மீரா மிதுனுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அழகி போட்டி நடத்த ஏற்பாடு செய்து, பின்னர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாகவும், இதற்காக கொடுத்த 50 ஆயிரம் ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் என்பவருக்கு எதிராக ரஞ்சித் பண்டாரி என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, தமிழ்செல்வி என்கிற மீரா மிதுன் முன் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார்.


அதில், தொழில் போட்டி காரணமாக, தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மீராமிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 50 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளவும், தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

See Also:

Loading...

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...