• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கடும் அப்செட்டில் இருக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளரின் முன்னாள் மனைவி - என்ன காரணம்?

கடும் அப்செட்டில் இருக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளரின் முன்னாள் மனைவி - என்ன காரணம்?

தீபா

தீபா

ஒரு கஷ்டமான காலத்திலிருந்து நாம் மீண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் ஒரு சிலர் கடந்த காலத்தை பற்றிய கசப்பான நினைவுகளை எனக்கும் தோன்ற செய்யும் வகையில் சில செயல்களில் ஈடுபடுவது வேதனையை தருகிறது.

  • Share this:
தமிழத்தின் மிகப்பெரிய மற்றும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் சீசன்-5, பிரபல முன்னணி சேனலான ஸ்டார் விஜய் டிவி-யில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஷோவில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்றுள்ளவர்களில் பிரபல யூடியூபர் மற்றும் திரைப்பட விமர்சகரான அபிஷேக் ராஜாவும் ஒருவர். சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருந்து வரும் அபிஷேக் ராஜா, பல சினித்துறை பிரபலங்களை நேரில் பேட்டி எடுத்து சிக்கலான கேள்விகளை கேட்டு பல எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அபிஷேக் ராஜா, தீபா நடராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த ஜோடி 2019-இல் பிரிந்து செல்ல முடிவு செய்தது. இதனை தொடர்ந்து விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது அபிஷேக் ராஜா பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில் திருமணமான புதிதில் இருவரும் ஒன்றாக சேர்ந்து சில மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து இருந்தனர்.

அந்த வீடியோக்கள் தற்போது யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இதனை கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து விட்டு உற்சாகமாக வாழ்ந்து வந்த அபிஷேக்கின் முன்னாள் மனைவியான தீபா நடராஜன் மிகவும் கடுப்பாகி உள்ளார் மற்றும் அப்செட் ஆகி இருக்கிறார். பிக்பாஸ் தமிழ் காரணமாக அபிஷேக் அடைந்துள்ள சமீபத்திய பிரபலத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனல், அவர்களின் பழைய பேட்டி மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி வியூஸை அதிகரித்து வருகிறது.

இதற்கு தனது சோஷியல் மீடியாவில் எதிர்ப்பு தெரிவித்து உள்ள தீபா நடராஜன். இது தொடர்பாக போஸ்ட் ஒன்றையும் ஷேர் செய்து இருக்கிறார். அபிஷேக்குடன் தான் இணைந்து பேட்டி கொடுத்த வீடியோக்களை சமீபத்தில் மீண்டும் ஒரு யூடியூப் சேனல் ரீனேம் செய்துள்ளது. இதனால் அபிஷேக் பற்றி கூகுள் செய்வோருக்கு முதலில் இந்த வீடியோவே வருகிறது. மேலும் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. இந்த பழைய பேட்டி வீடியோ தற்போது வைரலாகி வருவது என்னை வருத்தமடைய செய்துள்ளது.




ஏனென்றால் ஒரு கஷ்டமான காலத்திலிருந்து நாம் மீண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் ஒரு சிலர் கடந்த காலத்தை பற்றிய கசப்பான நினைவுகளை எனக்கும் தோன்ற செய்யும் வகையில் சில செயல்களில் ஈடுபடுவது வேதனையை தருகிறது. விவகாரத்திற்கு பிறகு குறிப்பிட்ட சேனலிடம் தான் அபிஷேக்குடன் இணைந்து கொடுத்த பேட்டிகளை மற்றும் மேரேஜ் போட்டோ மற்றும் வீடியோக்களை ரிமூவ் செய்ய பல மாதங்களாக கூறி வருகிறேன்.



ஆனால் இதுவரை அவை ரிமூவ் செய்யப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பிக்பாஸில் அபிஷேக் பங்கேற்ற பிறகு அவற்றை வேண்டுமென்றே மீண்டும் வைரலாக்கி வருவது எனக்கு மனவேதனையை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் பலரும் திருமண வாழ்க்கை பற்றிய கேள்விகளை என்னிடம் முன் வைக்கிறார்கள். இது தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Also read... கணவர் மறைவை நினைத்து கண்ணீர் விடும் பிக் பாஸ் பாவ்னி!

மேலும் வீடியோவின் டைட்டிலை Bigg Boss 5 VJ Abishek என்றும் மாற்றி இருக்கிறர்கள். இன்றைய ஊடகங்களின் யதார்த்தத்தை பார்க்கும் போது அதிர்ச்சியாக, வெட்கமாக இருக்கிறது. வீடியோவின் டைட்டிலை மாற்றி பழைய வீடியோ மூலம் அதிக பார்வையாளர்களை பெற முயற்சிப்பது எனக்கு வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே மீண்டும் கேட்கிறேன் நானும், அபிஷேக் இருக்கும் வீடியோக்களை நீக்கி விடுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: