Home /News /entertainment /

பிக் பாஸில் மீண்டும் சிபி.. நிரூப்புக்கு கெத்து இல்லை என விமர்சனம்!

பிக் பாஸில் மீண்டும் சிபி.. நிரூப்புக்கு கெத்து இல்லை என விமர்சனம்!

பிக் பாஸ் சிபி

பிக் பாஸ் சிபி

நிரூப்பை பலரும் விமர்சித்து வரும் நிலையில், சிபியும் நிரூப்புக்கு கெத்து இல்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இறுதி வாரத்தில் பயணித்து கொண்டிருகிறது. அடுத்த வாரம் ஃபைனல்ஸ். இப்போது வீட்டில் 6 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம், இந்த சீசனின் இறுதி எலிமினேஷனாக வீட்டில் இருந்து  ஒருவர் வெளியேற்றப்படுவார். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெளியேற்றுவது யாராக இருக்கும் என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்ததாக தாமரை அல்லது பாவனி வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஓட்டு எண்ணிக்கையில் நிரூப் கடைசியில் இருப்பதால், அவர் வெளியேற்றப் படலாம் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அவரைக் காப்பாற்றவே நேற்றைய டாஸ்க் கொடுக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது. நிரூப்பை பலரும் விமர்சித்து வரும் நிலையில், சிபியும் நிரூப்புக்கு கெத்து இல்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

    இதையும் படிங்க.. விஜய் டிவி காற்றுக்கென்ன வேலி சீரியலில் திடீர் திருப்பம்.. புது நடிகரை அறிமுகம் செய்யும் சீரியல் குழு

    பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டது. மூன்று லட்சத்தில் தொடங்கிய பணப்பெட்டி டாஸ்க்கில், பெட்டியில் இருந்த பணத்தின் மதிப்பு 12 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. பணப்பெட்டியை யார் எடுத்துக் கொண்டு செல்வார் என்று எல்லோரும் ஆவலாக காத்திருந்த போது, எதிர்பாராதவிதமாக சிபி பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் 5ல் இன்னும் பல ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன .. சொன்னது யார் தெரியுமா?

    சூட்கேஸ் டாஸ்க்கில் வெளியேறிய நபர்கள், அந்த வார இறுதியில் வெளியாகும் எபிசோடில் தோன்றுவது வழக்கம். எல்லா சீசன்களிலும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிய போட்டியாளர்கள், மீண்டும் சனி அல்லது ஞாயிறு அன்று தோன்றி, நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் உரையாடி, விடைப்பெற்று செல்வது வழக்கம். அதே போல, ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேறும் போதும், வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களை காணொளி வழியே சந்தித்து, உரையாடி, அவர்களுக்கான send-off குறும்படத்தையும் பார்த்துவிட்டு தான் செல்வார்கள். அதேபோல 12 லட்ச ரூபாயுடன் வெளியேறிய சிபி இன்றைய எபிசோடில் தோன்றுகிறார்.

    எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சக போட்டியாளர்கள் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கமல்ஹாசன் கேட்பது வழக்கம். சிபியிடமும் கமல் அதேபோல கேட்பதாக காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் காணப்படுகின்றன. அதில் நிரூப் மற்றும் ராஜூ பற்றி சிபி கூறுகிறார். நிரூப்புக்கு எப்படியாவது ஃபைனல்ஸ் சென்று விட வேண்டும் என்ற வெறி இருக்கிறது ஆனால் அது கொஞ்சம் கூட கெத்தாக இல்லை, இன்னும் கொஞ்சம் நன்றாக விளையாடி இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும் என்று சிபி தெரிவித்துள்ளார்.

    அடுத்ததாக, ராஜுவைப் பற்றி கேட்கும்போது, ராஜு எல்லாருடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு மிகவும் முயற்சி செய்வார் என்று கூறும் காட்சிகளும் உள்ளன.

    தற்போது வெளியான புரோமோ இங்கே:



    சிபி மற்ற போட்டியாளர்களை பற்றி என்ன கூறுகிறார் என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி