• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இதுவா? அதுவா? கமல்ஹாசனிடம் சரண்டர் ஆன சின்ன பொண்ணு!

இதுவா? அதுவா? கமல்ஹாசனிடம் சரண்டர் ஆன சின்ன பொண்ணு!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

விட்டு கொடுத்ததால் தான் தாமரை ஜெயித்ததாக பிரியங்காவிடம் புறம் பேசினார்.

  • Share this:
    இன்றைய பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் வார்த்தை ஜாலத்தால் சரண்டர் ஆகிறார் பாடகி சின்ன பொண்ணு.

    விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது இரண்டு வாரம் முடிய போகுது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், அதில் நமீதா வெளியேறியதால் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். வாரத்தின் முதல் நாள் நடைபெற்ற தலைவரை தேர்ந்தெடுக்கும் பலூன் டாஸ்கில் தாமரை செல்வி வெற்றி பெற்று பிக் பாஸ் சீசன் 5-ன் முதல் தலைவராக உள்ளார்.

    வீட்டின் தலைவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த வார நாமினேஷன் லிஸ்டில் வீட்டின் தலைவரான தாமரை செல்வி மற்றும் நடிகை பாவ்னியை தவிர மீதம் இருக்கும் 15 போட்டியாளர்களும் உள்ளனர். இதில் குறைந்த வாக்குகள் பெற்ற நபர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார். அவர் யார் என்பது இன்றே தெரிந்துவிடும் என ஏற்கெனவே வெளியான முதல் புரமோவில் கமல்ஹாசன் தெரிவித்துவிட்டார்.

    இந்த சீசனில் முதல் லக்ஸுரி டாஸ்காக "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கையில் நடந்த கதை பற்றி சொல்ல வேண்டும். மேலும் ஒருவர் பேசி முடித்தவுடன் அவர்கள் கூறிய கதைக்கு டிஸ்லைக்ஸ், லைக்ஸ், ஹார்ட் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி போட்டியாளர்களுக்கு பாய்ண்ட்ஸ்கள் வழங்கப்படுகிறது. 2 வாரமாக இழுத்த இந்த டாஸ்க் ஒருவழியாக நேற்றுடன் முடிவடைந்தது.

    தீர்ப்பு இன்று இரவே தெரிந்துவிடும்... கமல் சொல்லும் சூசகம்!

    இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள 2 வது புரமோவில் வீட்டு தலைவரை தேர்ந்தெடுக்க நடைப்பெற்ற பலூன் டாஸ்க் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. இருமுறை போட்டியாக இருந்த சின்ன பொண்ணு, தாமரை செல்வியிடம் தான் இதற்கு விளக்கம் கேட்கப்படுகிறது. அதாவது இந்த டாஸ்கில் சின்ன பொண்ணு கோபம் அடைந்து சில வார்த்தைகளை விட்டார். அதுமட்டுமில்லை அவர் பலூனை அவரே உடைத்து கொண்டு, விட்டு கொடுத்ததால் தான் தாமரை ஜெயித்ததாக பிரியங்காவிடம் புறம் பேசினார்.



    இதுக்குறித்து இன்றைய தினம் கமல்ஹாசன் விசாரணை கமிஷன் நடத்துகிறார். இதுவா? அதுவா? நாடகமா? நாட்டுபுற பாடலா? என கமல்ஹாசனின் அடுத்தடுத்த வார்த்தை ஜாலங்களால் சின்ன பொண்ணு சரண்டர் ஆகுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: