Home /News /entertainment /

bigg boss : மீண்டும் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்ற சர்ச்சை போட்டியாளர்!

bigg boss : மீண்டும் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்ற சர்ச்சை போட்டியாளர்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

bigg boss bb ultimate : ஏற்கெனவே பிக் பாஸ் மற்றும் அதன் தொகுப்பாளர் கமல்ஹாசன் பற்றி நித்யா தெரிவித்திருந்த கருத்து இணையத்தில் பெரும் வைரலானது

    பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இது ஃபினாலே வீக். இந்த வார இறுதியில் பிக் பாஸ் அல்டிமேட் ஃபைனல்ஸ் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர்.

    கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக ஒளிப்பரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.
    வெள்ளித்திரையில் பல சாதனைகள் படைத்த உலக நாயகனை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரைக்கு அழைத்து வந்தது . இதனுடன் சேர்ந்து அடுத்த மைல்கல்லாக முதன் முறையாக விஜய் தொலைக்காட்சி , பிக்பாஸ் அல்டிமேட் ஷோவை ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக்கியது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 X 7 என்ற அடிப்படையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஆரம்ப எபிசோட்களை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். திடீர் என்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலக போவதாக அறிவித்தார்.

    சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்..இது நியாயமே இல்லை என சண்டை போடும் ரசிகர்கள்!

    விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிலையில் கமலுக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிப்பு வெளியானது. கமலுக்கு பிறகு இந்த நிகழ்ச்சியை தனக்கான ஸ்டைலில் சிம்பு எடுத்து சென்றார். முதலில் 7 வாரங்கள் என அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி தற்போது 10வது வாரத்தை எட்டியுள்ளது.இந்த வாரத்தின் இறுதியில் பிக் பாஸ் அல்டிமேட் ஃபைனல்ஸ் நடைப்பெறவுள்லது. ஏற்கெனவே பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் தான் என்ற பேச்சுகள் இணையத்தில் ஏராளமாக பேசப்பட்டு வருகின்றன.



    இந்நிலையில் தற்போது செலபிரேஷன் வீக். ஃபைனல்ஸூக்கு செல்லும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த மீண்டும் பழைய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தருகின்றனர். இதில் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கிய அனிதா சம்பத் ஏற்கெனவே வந்திருக்கும் நிலையில், இன்றைய எபிசோடில் தாடி பாலாஜியும் வருகை தருகிறார். 2 தினங்களுக்கு முன்பு தனது முன்னாள் மனைவி நித்யாவிடம் இருந்து மகளை மீட்டு தருமாறு கோர்டில் மனு அளித்திருந்த பாலாஜி இத்தனை பிரச்சனைகளுக்கும் நடுவிலும் பிக் பாஸ் ஷோவுக்கு வந்துள்ளார்.

    உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

    அதுமட்டுமில்லை, ஏற்கெனவே பிக் பாஸ் மற்றும் அதன் தொகுப்பாளர் கமல்ஹாசன் பற்றி நித்யா தெரிவித்திருந்த கருத்து இணையத்தில் பெரும் வைரலானது, இப்படி ஒருபக்கம் பல பிரச்சனைகள் சென்று கொண்டிருக்க தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் ட்நிகழ்ச்சியில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி