• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • சர்ச்சைக்குரிய படத்தில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் புகழ் பாலாஜி !

சர்ச்சைக்குரிய படத்தில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் புகழ் பாலாஜி !

பிக் பாஸ் பாலாஜி

பிக் பாஸ் பாலாஜி

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக புதிதாக தயாராக உள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க பாலாஜி முருகதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

 • Share this:
  பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் புதிதாக படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

  இது தொடர்பான தகவலை சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு அறிவித்து உள்ளார் பாலாஜி முருகதாஸ். சர்வதேச மாடலிங் நிகழ்சிகள் மற்றும் அழகு போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று புகழ் பெற்ற மாடலாக வலம் வருபவர் பாலாஜி முருகதாஸ். ஃபேஷன் உலகில் கால் பதித்து புகழ்பெற்று விளங்கிய போதும், மக்களுக்கு பரிச்சயமாகாமல் இருந்து வந்தார்.

  5 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க தேடி வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் இவர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்றார் பாலாஜி முருகதாஸ்.இவருக்கும் பிக்பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளருமான நடிகர் ஆரிக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்கள் மற்றும் விவாதங்கள், ஷிவானியுடன் இவர் காட்டிய நெருக்கம் உள்ளிட்ட பல விஷயங்களால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

  மேலும் பிக்பாஸ் சீசன் 4 மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் செல்ல முக்கிய காரணமாகவும் இருந்து கன்டென்டை வாரி வழங்கினார்.இந்த 4-வது சீசனில் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் தவிர நடிகர் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித், சுசித்ரா, ரேகா, சோம் சேகர் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர்.

  காதலனை மணமுடிக்க பரிகாரம் வரை சென்ற நயன்தாரா... மரத்தை கல்யாணம் செய்ய போகிறாரா?

  இவர்களில் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் இவர்கள் இருவர் மட்டுமே தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றனர். முதிர்ச்சியடைந்த ஒரு நபராக ஆரியும், இளம் காளை போன்று துள்ளலாக பாலாஜியும் நடந்து கொண்ட விதம் கேமை சுவாரஸ்யமாக கொண்டு சென்றது. இறுதியாக ஆரி வின்னராகவும், பாலாஜி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

  இந்நிலையில் பிக்பாஸ் புகழ் வெளிச்சம் மூலம் வெள்ளித்திரையில் பாலாஜி நுழைவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. இது தற்போது நிறைவேறி உள்ளது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக புதிதாக தயாராக உள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க பாலாஜி முருகதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

  இது தொடர்பாக லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் வெயிட்டுள்ள வீடியோவில், பாலாஜி முருகதாஸ் ஒப்பந்தத்தில் கையழுத்திடும் காட்சியும் அதற்கு ரவீந்தர் "ஆல் தி பெஸ்ட் மை பிரதர், இன்னும் நிறைய படங்கள் நீங்க பண்ணனும்" என்று வாழ்த்தும் காட்சியும் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோவை ஷேர் செய்து, "மிகவும் சர்ச்சைக்குரிய எங்களது ப்ராஜக்ட் ஒன்றில் பாலாஜி முருகதாஸ் முன்னணி நடிகராக அறிமுகமாகிறார். அவரை வாழ்த்துங்கள். ஒரு நடிகராக உங்கள் அனைவரையும் மகிழ்விப்பார்" என்று ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.   
  Instagram இல் இந்த இடுகையைக் காண்க

   

  Balaji Murugadoss இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@officialbalakrish)


  இதே வீடியோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள பாலாஜி முருகதாஸ், "என் முதல் திரைப்படத்தில் நடிப்பதற்காக கையெழுத்திட்டுள்ளேன். எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்.. லிப்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவீந்தருக்கு நன்றி. எப்போதும் போல உங்கள் அனைவரின் ஆதரவும் ஆசிகளும் தேவை" என்று கேட்டு கொண்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: