ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

bigg boss Azeem : மீண்டும் மீண்டும் கேஸில் சிக்கும் அசீம்.. கமல் காட்ட போவது ரெட் கார்டா? குறும்படமா?

bigg boss Azeem : மீண்டும் மீண்டும் கேஸில் சிக்கும் அசீம்.. கமல் காட்ட போவது ரெட் கார்டா? குறும்படமா?

பிக் பாஸ் அசீம்

பிக் பாஸ் அசீம்

bigg boss Azeem dhanalakshmi : தனலட்சுமி பொம்மையை தூக்கி எறிய அசீம் கோபத்தில் அவரை பிடித்து கீழே தள்ளி விடுகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் வீட்டில் அசீம் பற்ற வைத்த நெருப்பு இன்னும் பற்றி எரிகிறது. இன்றைய புரமோவிலும் அது தொடர்கிறது. ஏற்கெனவே அசீம் மீது பயங்கர கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் இந்த புரமோவை  பார்த்து இன்னும் சூடாகியுள்ளனர்.

  பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து 20 நாட்களை கூட எட்டவில்லை அதற்குள்  அடிதடி, சண்டை, போட்டி, பொறாமை, பழி வாங்குதல் என அனைத்து ரசங்களையும் போட்டியாளர்கள் போட்டிப்போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றனர். போன வாரம் கமல்ஹாசனால் வறுத்தெடுக்கப்பட்ட அசீம், இந்த முறை ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து வரும் அனைத்து ஆக்டிவிட்டீஸூம் சர்ச்சையில் முடிந்துள்ளது. கூடவே ரசிகர்ளின்  வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தனலட்சுமி vs அசீம் சண்டை ஓய்ந்த பாடில்லை.நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கில் ஆரம்பித்த இந்த மல்லுக்கட்டு இன்றும் தொடர்கிறது.

  பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரச்சிதாவை பற்றி பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

  நேற்றைய எபிசோடில் நீயெல்லாம் பொண்ணா? சென்ஸ் இல்லை? திமிரு என நாவடக்கம் இல்லாமல் தனலட்சுமியை ஒருகாமையில் பேசிய அசீம் இன்று அவரை கீழே தள்ளி விடுகிறார். இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் இன்னும் அசீம்மை திட்டி தீர்த்து வருகின்றனர். தனலட்சுமி செய்யாத தவறுக்கு அவரை அசீம் கார்னர் செய்து ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் அவருக்கு எதிராக திருப்பி விடுகிறார். ஆனால் தனலட்சுமி தைரியமாக நின்று  விளையாடுகிறார். இதனால் பலருக்கும் தனலட்சுமி ஃபேவரெட் போட்டியாளராக மாறியுள்ளார்.

  ' isDesktop="true" id="825763" youtubeid="UbMrIV5D5aw" category="television">

  இன்றைய புரமோவில் நீயும் பொம்மை நானு பொம்மை  டாஸ்கில் அசீம் பொம்மையை அசல் உள்ளே எடுத்து செல்கிறார். அதை ஜனனியும் தனலட்சுமியும் தடுக்கின்றனர். முதலில் பொம்மையை ஜனனி தூக்கி எறிகிறார். அடுத்து தனலட்சுமி பொம்மையை தூக்கி எறிய அசீம் கோபத்தில் அவரை பிடித்து கீழே தள்ளி விடுகிறார். தனது கட்டுப்பாட்டை இழந்து அசீம் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களை கோபமடைய செய்துள்ளது. போன வாரமே அவருக்கு ரெட் கார்டு வார்னிங் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அசீமின் மூக்கை உடைக்க குறும்படம் போட வேண்டும் அல்லது ரெட் கார்டு கொடுத்து வீட்டில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv