ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'நான் திமிறி எழும் தமிழன்’.. ரூ.25 லட்சத்தை குழந்தைகளின் படிப்புக்காக கொடுக்கும் பிக்பாஸ் அசீம்!

'நான் திமிறி எழும் தமிழன்’.. ரூ.25 லட்சத்தை குழந்தைகளின் படிப்புக்காக கொடுக்கும் பிக்பாஸ் அசீம்!

பிக் பாஸ் அசீம்

பிக் பாஸ் அசீம்

வீட்டுக்குள் விளையாடும் போது, பல பேச்சுகளையும், ஏச்சுகளையும், இகழ்ச்சிகளையும், பல சங்கடங்களையும் நான் சந்தித்திருக்கேன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வென்ற 50 லட்சத்தில் பாதியை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பிற்காக செலவிடுவதாக சின்னத்திரை நடிகர் அசீம் அறிவித்துள்ளார்.

இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழுக்கும் அறிமுகமானது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார். அந்த வகையில் சில தினங்கள் முன்பு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் முடிவடைந்தது.

இதில் சின்னத்திரை நடிகர் அசீம் டைட்டிலை வென்றார். இதையடுத்து தான் நிகழ்ச்சியில் கூறியது போல் தனது பரிசு தொகையில் பாதியான 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு செலவிடுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பிக் பாஸ் முடிந்து 2 நாள் ஆகிவிட்டது. இன்றைக்கு தான் ஃபோன் எடுத்தேன். உடனே என் மக்களுக்கு வீடியோ போட வேண்டும் என நினைத்து தான் இந்த வீடியோ. உலகெங்கும் இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு இந்த எளிய தாய் மகனின் வணக்கம். வீட்டுக்குள் விளையாடும் போது, பல பேச்சுகளையும், ஏச்சுகளையும், இகழ்ச்சிகளையும், பல சங்கடங்களையும் நான் சந்தித்திருக்கேன். அப்போது நமது தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது என நினைத்தேன். ஒவ்வொரு வாரமும் நான் நாமினேட் ஆகும் போதும், எனது நம்பிக்கையை நீங்கள் மெய் படுத்தினீர்கள்.

இது தீட்டு, இவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்!

டைட்டில் வென்றால் 50 லட்சத்தில் 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளி கல்வி செலவுக்கு தருவதாக சொல்லியிருந்தேன். அதேபோல் ஓபன் அக்கவுண்ட் மூலம் அவர்களுக்கு தரப்போகிறேன். நீங்கள் என் மீது காட்டிய அன்புக்கு இது ஒரு சதவீதம் கூட ஈடாகாது. ஆனால் என்னை ஆதரித்த உங்களுக்கு என்னால் முடிந்ததை திரும்பச் செய்கிறேன். நான் வீழ்ந்து விட மாட்டேன், வீறு கொண்டு எழுவேன். ஏனென்றால் நான் திமிறி எழும் தமிழன்” எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil 6