ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் ஆயிஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர்.. போட்டுடைத்த முன்னாள் காதலன்!

பிக் பாஸ் ஆயிஷா ஏற்கெனவே திருமணம் ஆனவர்.. போட்டுடைத்த முன்னாள் காதலன்!

பிக் பாஸ் ஆயிஷா

பிக் பாஸ் ஆயிஷா

"சத்யா சீரியல் சென்ற பின்பு விஷ்ணுவுடன் நெருக்கம் ஆனார்." என தேவ் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் 6 போட்டியாளர் ஆயிஷா பற்றி அவரின் முன்னாள் காதலர் தேவ் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பிக் பாஸ் 6 எதிர்பார்த்ததை விட பயங்கர விறுவிறுப்பாக செல்கிறது. இந்த சீசனில் முதல் வாரமே சண்டை பற்றிக்கொண்டது. குறிப்பாக அசீம் இந்த சீசனின் மிகப் பெரிய கன்டெண்ட் புரோடிசராக உள்ளார். இவரை நம்பியே இந்த சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதுவரை 3 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். போன வாரம் ஆயிஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது. அதே போல் கமலும் அவரை பாராட்டி இருந்தார். அசீம் விவகாரத்தில் அவர் பக்கம் நியாயம் இருந்தது என அனைவரும் நினைத்தனர்.

  அந்த விஷயத்தில் வனிதாவுக்கே டஃப் கொடுக்கும் அனிதா!

  ஆனால் இந்த வாரம் அப்படியே தலைகீழானது. கமலையே ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஆயிஷா எதிர்த்து மரியாதை இல்லாமல் பேசியது பெரும் சர்ச்சையானது. அதே போல் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஆயிஷா நடிப்பதாக ஸ்டேட்மெண்ட் வைத்துள்ளனர். இப்படி இருக்கையில் ஆயிஷாவின் முன்னாள் காதலன் என கூறப்படும் தேவ் பிரபல யூடியூப் வலைத்தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஆயிஷாவுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து விட்டது என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  அந்த பேட்டியில் தேவ் பேசியிருப்பதாவது, “ சென்னை அமிர்தாவில் படித்துக் கொண்டிருந்த போது ஆயிஷா என் நண்பர் மூலம் அறிமுகம் ஆனார். அவருக்கு நான் தான் சீரியலில் வாய்ப்பு வாங்கி  கொடுத்தேன். இருவரும் காதலித்தோம். ஒரே வீட்டில் தங்கி இருந்தோம். அவருக்கு ஏற்கெனவே திருமணமும் ஆகி விட்டது. அதை எல்லாம் தெரிந்து தான் நான் அவரை காதலித்தேன். ஆயிஷா வீட்டுக்கு சென்றும் அவரை கல்யாணம், செய்து கொள்ள கேட்டு இருந்தேன். அவர்கள் சம்மதிக்கவில்லை. வாய்ப்புக்காக  டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டார். அந்த அக்கவுண்டையும் நான் தான் பார்த்துக் கொள்வேன். ஆனால் டிக் டாக் செய்யும் போது  நான் சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தேன் என்று  என்னை  தப்பானவன் போல்  குறிப்பிட்டு பிக் பாஸில் ஆயிஷா பேசி இருக்கிறார்.

  சத்யா சீரியல் சென்ற பின்பு விஷ்ணுவுடன் நெருக்கம் ஆனார். அதன் பின்பு என்னை பிரேக் அப் செய்துவிட்டார்.என்னை 3 வருடமக டிரைவர் போல் யூஸ் செய்துவிட்டு கடைசியில் எந்த காரணமும் சொல்லாமல் விலகி விட்டார். இப்போது என் தங்கையின் முன்னாள் காதலன் உடன் அவர் நெருக்கமாக இருக்கிறார். அதனால் தான் y என செயினில் டாலர் போட்டு இருக்கிறார். அவர் எப்போதுமே நெற்றியில் குங்குமம்  வைத்துக் கொள்வார். யாரை எல்லாம் காதலிக்கிறாரோ அவருடன் வெளியில் செல்லும் போதெல்லாம் இப்படி தான் செய்வார்” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை ஆயிஷா மீது  பகிரங்கமாக வைக்கிறார் தேவ். இவை எல்லாவற்றுக்கும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்பு ஆயிஷா தகுந்த பதில் அளிப்பார் என தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv