ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மைனாவிடமும் வேலையை காட்டிய அசல் கோலார்.. வெளியானது வீடியோ!

மைனாவிடமும் வேலையை காட்டிய அசல் கோலார்.. வெளியானது வீடியோ!

பிக் பாஸ்

பிக் பாஸ்

அசல்  கோலார் மைனா நந்தினியின் கையை பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளர் அசல் கோலார், மைனா நந்தினியின்  கையைப் பிடித்து பார்க்கும் காட்சிகள் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

    பிக் பாஸ் சீசன் 6 கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 21 வது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைந்தார். பிக் பாஸ் வீட்டில் தற்போது கதை டாஸ்க் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

    பிக் பாஸில் என்ன நடக்கிறது? அசல் கோளாறு செய்த விஷயத்தால் வெடித்தது சர்ச்சை!

    நேற்றைய எபிசோடில் தனலட்சுமி கதையை போட்டியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். அசீம், ஜனனி கதைகள் நிராகரிக்கப்பட்டன. இன்றைய எபிசோடில் கதிர், மைனா நந்தினி, மகேஸ்வரி,  ஆகியோர் கதை சொல்ல உள்ளனர். இதுக் குறித்த புரமோக்களும் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் அசல்  கோலார், மைனா நந்தினியின் கையை பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஏற்கெனவே போட்டியாளர் அசல் கோலார், குயின்ஸிடம் நடந்துக் கொண்ட விதம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அசலை உடனே வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதே போல் ஆயிஷாவின் கையையும் அசல் ஒருமுறை தொட்டார். இதனால் அவர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி இருக்கையில் நேற்றைய எபிசோடில் பாத்ரூம் ஏரியாவில் அசல், நந்தினி, விக்ரமன், ஏ.டி.கே ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது அசல் கோலார் திடீரென்று மைனா நந்தினியின் கையை பிடித்து பார்க்கிறார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அவர் கையை இழுத்து பார்க்கிறார்.

    இந்த வீடியோ தற்போது பிக் பாஸ் ரசிகர்களால் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் குழு அல்லது கமல்ஹாசன் அசல் கோலாரை வார்னிங் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv