Home /News /entertainment /

தங்கை கணவரை அர்ச்சனா இப்படி அசிங்கப்படுத்தி இருக்க கூடாது.. பிக் பாஸ் அர்ச்சனாவின் வைரல் வீடியோ!

தங்கை கணவரை அர்ச்சனா இப்படி அசிங்கப்படுத்தி இருக்க கூடாது.. பிக் பாஸ் அர்ச்சனாவின் வைரல் வீடியோ!

பிக் பாஸ் அர்ச்சனா

பிக் பாஸ் அர்ச்சனா

அர்ச்சனா பேசுவதை அர்ஜூன் ஜாலியாக எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் ரிப்ளை செய்வது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

    பிக் பாஸ் புகழ் அர்ச்சனா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அர்ச்சனா தனது தங்கையின் கிச்சனை சுற்றி காட்டுகிறார். கிடைக்குற கேப்பில் எல்லாம் தங்கையின் கணவர் அர்ஜூனை பங்கமாக அசிங்கப்படுத்துகிறார்.இந்த வீடியோ ரசிகர்களால் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.

    பிக் பாஸ் அர்ச்சனா பற்றிய அறிமுகமே சின்னத்திரை ரசிகர்களுக்கு தேவைபடாது. விமர்சனமாக இருந்தாலும் சரி வரவேற்பாக இருந்தாலும் சரி இதுவரை ஏகப்பட்ட கருத்துக்களை அர்ச்சனா சந்தித்து இருக்கிறார். ஆங்கராக பயணத்தை தொடங்கியவர் திருமணத்திற்கு பிறகு ஒரு சின்ன கேப் எடுத்தார். சில ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விஜய் டிவியில் இவரின் முகத்தை பார்க்க முடிந்தது. அடுத்தது தனது மகள் ஜாரவுடன் ஜீ தமிழில் களம் இறங்கினார். ஜீ தமிழில் ஒளிப்பரப்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கினார்.

    அப்போது தான் பிக் பாஸ் வாய்ப்பு அவரின் கதவை தட்ட, பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். அர்ச்சனாவிடம் ரசிகர்கள் எதிர்பார்த்தது வேறு, நடந்தது வேறு, அன்பு கேங்க் என்ற விளையாட்டை விளையாட்டி நெகடிவ் விமர்சனங்களை அள்ளி குவித்தார். நிகழ்ச்சியில் இருந்து அர்ச்சனா வெளியே வந்த பின்பும் அவரை அந்த சர்ச்சைகள் தொட்ர்ந்தது. இதனிடையில் தான் யூடியூப்பில் ‘வாவ் லைஃப்’ என்ற யூடியூப் சேனலை தொடங்கி அதில் வீடியோக்கள் வெளியிடுவதில் அர்ச்சனா பிஸியானார்.

    read more .. பிக் பாஸ் அமீர் தனது தாயுடன் இருக்கும் புகைப்படம்.. கலங்கும் ரசிகர்கள்!

    இந்த யூடியூப் சேனலில் அர்ச்சனா அவரின் மகள் ஜாரா, அர்ச்சனாவின் தங்கை அனிதா என அனைவரின் பதிவுகளும் இருக்கும். ஒருமுறை தனது மகள் ஜாராவுடன் அர்ச்சனா வெளியிட்ட பாத்ரூம் வீடியோ ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்று யூடியூப்பில் ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது அர்ச்சனாவின் யூடியூப் பக்கத்தில் கிச்சன் டூர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அர்ச்சனா தனது வீட்டில் இருக்கும் கிச்சனை ரசிகர்களுக்கு சுற்றி காட்டி விட்டதால் இந்த முறை அவரின் தங்கை அனிதாவின் கிச்சனை சுற்றி காட்டினார்.



    இந்த வீடியோவில் அனிதா, கிச்சனில் இருக்கும் பொருட்கள், கபோடுகள், பாத்திரங்கள் ஆகியவற்றை வரிசையாக காட்ட, அப்போது தான்  KITCHEN என்று எழுதி இருக்கும் மேட் ஒன்று அர்ச்சனாவின் கண்ணில்  பட்டது. கிச்சனில் கிச்சன் என எழுதி இருக்கும் மேட் எதற்கு? என்ற கேள்வியுடன் அதற்கான பதிலை அனிதாவின் கணவர் அர்ஜூனிடம் கேட்டார். அதற்கு அவர் கூறிய பதில் “இதுதான் கிச்சன் என தெரிந்து கொள்ள தான் இந்த மேட். அடிக்கடி வீட்டில் இப்படி ஒரு ரூம் இருக்குன்னு மறந்து போயிடுது”ன்னு பங்கமாக பதில் சொல்ல அர்ஜூனை, அர்ச்சனா தாளித்து எடுக்கிறார்.

    இதையும் படிங்க.. Amir : பிக் பாஸ் அமீர் வாழ்க்கையை மாற்றிய குழந்தைகள்.. காலில் விழும் வீடியோ வைரல்!

    பயங்கர ஜாலியாகவும் ரகளையாக இருக்கும் இந்த வீடியோவில் கிடைக்குற இடத்தில் எல்லா அர்ஜூனை அர்ச்சனா பயங்கரமாக கலாய்த்து விடுகிறார். அதுதான் அர்ச்சனாவின் ஸ்டைலே. வீட்டு மருமகன் என்று கூட பார்க்காமல் இப்படி கலாய்ப்பதா? என ரசிகர்கள் ஆர்வமாக கேள்விஎழுப்பி வருகின்றனர். ஆனால் அர்ச்சனா பேசுவதை அர்ஜூன் ஜாலியாக எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் ரிப்ளை செய்வது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவர்களின் குடும்ப ஒற்றுமை வியக்க வைப்பதாக பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு

    இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv, Youtube

    அடுத்த செய்தி