Bigg Boss Archana: அர்ச்சனா வீட்ல விசேஷம் - ஒன்று கூடிய பிக் பாஸ் பிரபலங்கள்!

Bigg Boss Archana: அர்ச்சனா வீட்ல விசேஷம் - ஒன்று கூடிய பிக் பாஸ் பிரபலங்கள்!

பிக் பாஸ் பிரபலங்கள்

அனிதாவின் கணவர் பிரபா, நிஷாவுடனும், குக் வித் கோமாளி தீபாவுடனும் இணைந்து ஜாலியாக நடனமாடியிருக்கிறார்.

  • Share this:
    பிக் பாஸ் அர்ச்சனா வீட்டு விஷேசத்தில் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துக் கொண்ட படங்கள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகின்றன.

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக 11-வது நாளில் நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. 77-வது நாளில் வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் அன்பு குரூப்பையும் உருவாக்கினார். இது மற்ற போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே விவாதப் பொருளாக மாறியது. அர்ச்சனாவின் ஒருதலைப்பட்ச போக்கை நெட்டிசன்கள் கண்டித்தனர். ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர், தான் தானாகவே இருந்ததாக விளக்கமளித்தார்.

    Bigg Boss Archana sister Anita Chandhoke Baby shower
    பிக் பாஸ் நட்சத்திரங்கள்


    இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதில் ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, கேபி, நிஷா, சோம், அனிதா உள்ளிட்ட பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். அந்தப் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகின்றன.

    Bigg Boss Archana sister Anita Chandhoke Baby shower
    தங்கையுடன் அர்ச்சனா





    இந்த நிகழ்வில் அனிதாவின் கணவர் பிரபா, நிஷாவுடனும், குக் வித் கோமாளி தீபாவுடனும் இணைந்து ஜாலியாக நடனமாடியிருக்கிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அனிதா, 'அனிதா சம்பத் கணவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்கள்’ என தலைப்பிட்டுள்ளார். வீடியோவை பகிர்ந்த 40 நிமிடத்திற்குள் 50,000 பேர் பார்த்திருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: