• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’சோறு தாங்க முக்கியம்...’ அடித்து சொல்லும் பிக் பாஸ் அர்ச்சனா!

’சோறு தாங்க முக்கியம்...’ அடித்து சொல்லும் பிக் பாஸ் அர்ச்சனா!

பிக் பாஸ் அர்ச்சனா

பிக் பாஸ் அர்ச்சனா

உங்கள் ஊரில் என்ன உணவு பின்பற்றப்படுகிறதோ அந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.

  • Share this:
    விஜய் டிவி அர்ச்சனா ‘சோறு முக்கியமா சங்கம் முக்கியமா?’ என்ற தலைப்பில் தனது யூ-ட்யூப் சேனலில் புதிதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    சன் டிவி-யில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுமமானவர் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, கவனம் பெற்றார். இதையடுத்து விஜய் டிவி-யில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    இதற்கிடையே கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர், தனது யூ-ட்யூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ‘சோறு முக்கியமா சங்கம் முக்கியமா? சோறு தாங்க முக்கியம்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

    அதில் ஆரோக்கியமான உணவு தான் நமக்கு முக்கியம் என்றபடி ஊட்டச்சத்து நிபுணரும், அர்ச்சனாவின் தங்கையுமான அனிதா பேசுகிறார். ஆரோக்கியமான உணவு என்றால் என்ன என்கிற கேள்வியை அனிதாவிடம் முன்வைத்தார் அர்ச்சனா. அதற்கு “உண்ணும் உணவு என்பதைவிட, அந்த உணவில் இந்த எலிமென்ட்டுகள் அனைத்தும் இருக்கிறதா என்பதை சரிபார்ப்பது அவசியம். கொழுப்பு உடலில் சேரக்கூடாது என்பதற்காக பல்வேறு வகையான நல்ல உணவு வகைகளைப் பலர் தவிர்ப்பார்கள். ஆனால், நம் ஆரோக்கியமான உடலுக்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம்.

    குறிப்பாக நட்ஸ் வகைகள். அவற்றில் இருக்கும் நல்ல கொழுப்புகள் நிச்சயம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதற்கடுத்து, புரதம், கால்ஷியம், இரும்பு, மினரல்ஸ் ஆகியவை உண்ணும் உணவில் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அந்த வரிசையில், புரதம் மற்றும் கால்ஷியம் இணைந்திருக்கும் பால், சீஸ், பனீர், சோயா வகைகள் மற்றும் டேட்ஸ், கீரை போன்ற இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் தவிர்க்காதீர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இதை எல்லாவற்றையும்விட உங்கள் ஊரில் என்ன உணவு பின்பற்றப்படுகிறதோ அந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. அதேபோல எந்த உணவுகள் சாப்பிட்டாலும், அதனை அளவோடு உட்கொள்ளவேண்டும். பிடிக்கும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. மேலும், சர்க்கரை, மைதா போன்ற வெள்ளை உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: