VJ Archana: 'அந்த பிசாசை சேர்த்துக் கொள்ளுங்கள்’ அறுவை சிகிச்சைக்குப் பிறகு அர்ச்சனாவின் முதல் பதிவு!

வி.ஜே.அர்ச்சனா

இருபது நாட்கள் கழித்து தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா.

  • Share this:
    மூளையில் ஆபரேஷன் செய்த பின்னர் வீடு திரும்பிய வி.ஜே.அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

    சன் டிவி-யில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுமமானவர் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, கவனம் பெற்றார்.

    இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர், மூளையில் ஏற்பட்ட பிரச்னையால் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார் அர்ச்சனா. இதனால் சில நாட்கள் சுய நினைவை இழந்திருந்தார். பின்னர் சர்ஜரி முடிந்து வீல் சேரில் வீட்டுக்கு வந்தார் அர்ச்சனா. இது தனக்கு மறுஜென்மம் என அவர் உருக்கமாக பேசி வெளியிட்டிருந்த வீடியோ சின்னத்திரை ரசிகர்களின் கவனம் பெற்றது.




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இருபது நாட்கள் கழித்து தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா. கடைசியாக அர்ச்சனா அறுவை சிகிச்சைக்கு முன்பு பதிவிட்டிருந்தார். ”ஒரு அறுவைசிகிச்சை உங்களை வீழ்த்தும் போது, உங்கள் மகள் இன்னும் உங்களிடம் சொல்கிறாள், “நீங்கள் ஒரு ராக்ஸ்டார்... உம்மா” என்று. வலியை வெல்லும்படி பிசாசை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்! பிறகு நீங்கள் பாதுகாப்பாக மீண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்!” என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: