விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலில் பிக் பாஸ் அர்ச்சனா இடம் பெற்றுள்ளார்.
ரியாலிட்டி ஷோ-க்களுக்கும், ஃப்ரெஷ்ஷான சீரியல்களுக்கும் விஜய் டிவி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற சேனல் என்றே சொல்லலாம். சில சீரியல்களில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது.
குறிப்பாக நடிகை ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இணைந்து நடித்த ராஜா ராணி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தவிர இருவருக்கும் இடையே ஏற்பட்ட கெமிஸ்ட்ரி, நாளடைவில் காதலாக மாறியது. அந்த சீரியல் முடிந்த பின்னர் ஆல்யாவும், சஞ்சீவும் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஆல்யா மானசா உடன் ‘திருமணம்’ சீரியல் சித்து நடித்து வருகிறார். இந்தியில் வெளியாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ‘என் கணவன் என் தோழன்’ சீரியலின் ரீமேக் என்றாலும் கூட, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இதன் கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா இரண்டு சீரியல்களையும் இணைத்து மெகா சங்கமமாக விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. டூர் போயிருக்கும் இடத்தில் மாமியார் - மருமகள், கணவன் - மனைவி என குடும்பங்களுக்கு இடையில் பல்வேறு போட்டிகளை வைக்கிறார்கள். தற்போது இதனை தொகுத்து வழங்குபவராக பிக் பாஸ் அர்ச்சனா இடம் பெற்றுள்ளார். இதன் ப்ரோமோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், ‘காதலே காதலே’ என்ற காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.