ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சக போட்டியாளரை முகத்தில் குத்திய பிக் பாஸ் பெண் பிரபலம்

சக போட்டியாளரை முகத்தில் குத்திய பிக் பாஸ் பெண் பிரபலம்

அர்ச்சனா கெளதம்

அர்ச்சனா கெளதம்

ஷாலின் பானோட், நிம்ரித் கவுர் அலுவாலியா ஆகியோர் அர்ச்சனாவுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரை முகத்தில் குத்தி தாக்கியுள்ளார் நடிகை அர்ச்சனா கவுதம்.

  பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளையும் இந்நிகழ்ச்சி எதிர்கொள்ளும். 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய டைரக்டர், சஜித்கானை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்தார்.

  பின்னர் சஜித்கானை பிக்பாஸில் இருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதமும் எழுதினார். இதற்கிடையே தற்போது பிக்பாஸ் வீட்டில் அடிதடி சண்டை நடந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நடிகை அர்ச்சனா கவுதமுக்கும், இன்னொரு போட்டியாளரான ஷிவ் தாக்கரே என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

  யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா

  இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றியது. உச்சகட்டமாக ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் குத்தி கடுமையாக தாக்கினார். இதையடுத்து ஷாலின் பானோட், நிம்ரித் கவுர் அலுவாலியா ஆகியோர் அர்ச்சனாவுக்கு எதிராக குரல் எழுப்பினர். அதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிக் பாஸை கேட்டுக்கொண்டனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு உடல்நிலையும் குன்றியது. இதையடுத்து அர்ச்சனா கவுதமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published: