• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Archana: 'நீ ரொம்ப மெச்சூர்ட்’ என விமர்சித்தவர்களுக்கு அர்ச்சனா மகளின் பதில்

Bigg Boss Archana: 'நீ ரொம்ப மெச்சூர்ட்’ என விமர்சித்தவர்களுக்கு அர்ச்சனா மகளின் பதில்

அர்ச்சனா - ஸாரா

அர்ச்சனா - ஸாரா

‘நீங்கள் அப்படி நினைத்தால், அதற்கு என்னால் உதவ முடியாது’ எனக் கூறியிருக்கிறார்.

  • Share this:
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4' ரியாலிட்டி ஷோவில் பிரபல வி.ஜே. அர்ச்சனா முக்கியப் போட்டியாளராக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக 11-வது நாளில் தாமதமாக நுழைந்த அவர் 77-வது நாளில் வெளியேற்றப்பட்டார்.

    அர்ச்சனா 'பிக் பாஸ் 4' போட்டியாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார். அதோடு அன்பு குரூப்பையும் உருவாக்கினார். இது மற்ற போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே விவாதப் பொருளாக மாறியது. தனக்குப் பிடித்தவர்களுக்கு மட்டும் அவர் ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்வதாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் தனது விருப்படியே தான் பிக் பாஸில் விளையாடியதாக அதற்கு பதிலளித்தார் அர்ச்சனா.

    Archana Daughter Zara's bold Reply

    இதற்கிடையில், அர்ச்சனாவின் மகள் ஸாரா 'பிக் பாஸ் 4' வீட்டில் தனது அம்மா அர்ச்சனா தங்கியிருந்தபோது நேர்காணல்களை வழங்கி பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் கணிசமான பிந்தொடர்பாளர்களையும் வைத்திருக்கிறார்.

    Archana Daughter Zara's bold Reply

    இந்நிலையில் ‘ஓ பேபி, நோ பேபி’ என்ற பாடலுக்கு வாயசைத்த வீடியோவை ஸாரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்த சிலர் ஸாரா ஓவர் ரியாக்ட் செய்வதாக கமெண்ட்டுகளில் தெரிவித்தனர். ”இது ஓவர் ரியாக்ட் மற்றும் மெச்சூர்ட். ஏனெனில் உனது அம்மா ஒரு ஆங்கர். அதனால் இது உன் மரபணுக்களில் இருக்கலாம், இது பாராட்டத்தக்கதல்ல. இன்னும் இளம் திறமையானவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அதை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு இல்லை” என ஒருவர் கமெண்டில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ஸாரா, ‘நீங்கள் அப்படி நினைத்தால், அதற்கு என்னால் உதவ முடியாது’ எனக் கூறியிருக்கிறார்.

    இன்னொருவர், “தயவுசெய்து உனது தாயின் மலிவான தன்மையைப் பெற வேண்டாம்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஸாரா, “அது என் அம்மா, அவரைப் பற்றி தீர்ப்பளிக்க உங்களுக்கு உரிமை இல்லை. நான் நானாக தான் இருக்கின்றேன்! அவர் அவராக இருக்கிறார். கருத்துப் பிரிவில் அனைவரின் கேரக்டரையும் சேதப்படுத்துவதை நிறுத்துங்கள்! விரைவில் குணமடையுங்கள்! கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: