ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அடேங்கப்பா! மகளின் பிறந்தநாளுக்கு எதிர்பார்க்காத சர்பிரைஸ் கொடுத்த அர்ச்சனா..

அடேங்கப்பா! மகளின் பிறந்தநாளுக்கு எதிர்பார்க்காத சர்பிரைஸ் கொடுத்த அர்ச்சனா..

அர்ச்சனா, சாரா

அர்ச்சனா, சாரா

Bigg Boss Archana Youtube Video : அர்ச்சனா தனது மகள் பிறந்தநாளுக்கு வேற லெவல் சர்பிரைஸ் செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தொகுப்பாளினி மற்றும் நடிகையான அர்ச்சனா தனது மகளான சாராவின் பிறந்தநாளை பிரைவேட் வில்லா புக் செய்து கொண்டாடியுள்ளார்.

  2000 களில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்தவர் அர்ச்சனா. இவர் சன் டிவி, விஜய் டிவி என முன்னணி தொலைக்காட்சிகளில் காமெடி டைம், இளமை புதுமை, கலக்க போவது யாரு என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழில் தொகுப்பாளினியாக தனது பணியை தொடங்கினார். இவர் தொகுத்து வழங்கிய சரி கம பா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

  பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனாவுக்கு ஹேட்டர்ஸ்களே அதிகம் உருவானார்கள். இதனால் ட்விட்டரில் இருந்தும் விலகினார். ஹேட்டர்ஸ்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அர்ச்சனாவின் ரசிகர்களும் ஒரு பக்கம் சப்போர்ட் செய்து வந்தனர்.

  லாக்டவுனில் ‘வாவ் லைஃப்’ என்ற யூடியூப் சேனலை அர்ச்சனா தொடங்கினார். இதில் ஹோம் டூர், கிச்சன் டூர், ஃப்ரிட்ஜ் டூர் என பல வீடியோக்களை அப்லோட் செய்து 1 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றார். ஆனால் இவரின் யூடியூப் வீடியோக்களிலும் ஒரு சர்ச்சை கிளம்பியது. ஆம். அர்ச்சனா பதிவிட்ட  ‘பாத்ரூம்  டூர்’ வீடியோ சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து வீடியோக்களை அப்லோட் செய்து வந்தார்.

  இதையும் படிங்க ; கணவருடன் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் தாமரைய பாருங்க.. வைரல் ரீல்ஸ்

  இந்நிலையில் அர்ச்சனா தனது மகளின் 15வது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை யூடியூபில் அப்லோட் செய்துள்ளார். அதில் அர்ச்சனாவில் தங்கையான அனிதா வீடியோவுக்கு இண்ட்ரோ கொடுக்கிறார். சாராவுக்கு எங்கே செல்கிறோம் என்பது தெரியாமல் அழைத்து செல்கின்றனர். வீட்டில் இருந்து கிளம்புவது முதல் வில்லா வருவது வரை அனைத்தையும் ஒவ்வொன்றாக விளக்குகிறார்கள். பின்பு சர்பிரைஸ் தெரிந்தவுடன் சாரா சந்தோஷத்தில் திளைக்கிறார். ‘இந்த மாதிரி பிரைவேட்டா வில்லா புக் பண்ணி செலிபிரேட் பண்ணுவோம்னு எதிர்பாக்கலன்னு’ கூறி அர்ச்சனா மற்றும் அனிதாவை  சாரா கட்டி அனைத்து கொள்கிறார். இந்த யூடியூப் வீடியோவில் சாரா கேக் கட்டிங் செய்வது முதல் ஸ்விம்மிங் பூலில் விளையாடுவது வரை அனைத்தும் இடம் பெற்றுள்ளது.

  ' isDesktop="true" id="751063" youtubeid="6cUZSBupVYY" category="television">

  இந்த யூடியூப் வீடியோ இதுவரை 5 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Archana biggboss, Youtube