Bigg Boss Archana: சர்ச்சையைக் கிளப்பிய அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் வீடியோ!

அர்ச்சனா

அர்ச்சனா வெளியிட்டிருந்த பாத்ரூம் வீடியோவை பிற யூ-ட்யூபர்ஸ் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர்.

  • Share this:
    பிக் பாஸ் அர்ச்சனா தனது யூ-ட்யூப் சேனலில் வெளியிட்ட ‘பாத்ரூம் டூர்’ வீடியோ பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

    விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அர்ச்சனா, வெளியில் வந்ததும் இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் ஆகியவற்றில் பிஸியாக இருக்கிறார். வாவ் லைப் எனும் அவரது சேனலில் தனது மகள் ஸாராவுடன் இணைந்து வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

    இந்நிலையில் சமீபத்தில், ’பாத்ரூம் டூர்’ என்ற பாத்ரூம் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ ஒரு பக்கம் அதிக பார்வையாளர்களை பெற மறுபுறம் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. காரணம் பிரபலமானவர்களை பயன்படுத்தி யூ-ட்யூப் சேனல் ஆரம்பித்து பெரும் வணிகத்தை நடத்தி வருகின்றன பல கார்ப்பரேட் நிறுவனங்கள். மறுபுறம் திறமைகளை மட்டும் மூலதனமாக போட்டு, ஒவ்வொரு சப்ஸ்கிரைபர்களையும் சம்பாதிக்கும் சோலோ கிரியேட்டர்கள். எப்போதும் இந்த இரு தரப்பிற்கும் முட்டல், மோதல் தான்.



    கார்ப்பரேட்டுகளின் திட்டப்படி பிரபலங்கள் ஆரம்பிக்கும் சேனல்கள் வெகு விரைவிலேயே அசுர வளர்ச்சி அடைந்து விடுகின்றன. ஆனால் தானே ஸ்கிரிப்ட் எழுதி, கேமராவை ஆபரேட் செய்து, எடிட் செய்து என பல வேலைகளை பார்க்கும் ஸீரோ பட்ஜெட் சோலோ கிரியேட்டர்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைப்பதில்லை. இதனால் பிரபலங்கள் தங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக விளங்குகின்றனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.



    இந்நிலையில் அர்ச்சனா வெளியிட்டிருந்த பாத்ரூம் வீடியோவை பிற யூ-ட்யூபர்ஸ் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் பலரும் அர்ச்சனாவின் குழந்தை, குடும்பம் என அனைவரையும் விமர்சித்ததால், காப்பி ரைட் பிரச்னையாகி, அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் அர்ச்சனா தான் என்பது சோலோ கிரியேட்டர்களின் கருத்து.

    பிரபலங்களும் கிரியேட்டர்கள் தானே அவர்கள் யூ-ட்யூப் பக்கம் வரக்கூடாதா என்பது அர்ச்சனாவின் கேள்வி. ”'பாத்ரூம் டூர்' என்ற பெயரைப் பார்த்ததும் பிடிக்கவில்லை என்றால் அதை அமைதியாகக் கடந்து போயிருக்கலாம். ஆனால், அதை ட்ரோல் செய்யவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். நான் காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்த வீடியோக்கள் அனைத்துமே தரக்குறைவான விமர்சனங்களை வைத்தவைதான்” என்கிறார் அர்ச்சனா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: