’திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...’ மீண்டும் படப்பிடிப்பில் விஜய் டிவி அர்ச்சனா!

பிக் பாஸ் அர்ச்சனா

படப்பிடிப்பு தளத்தின் வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-ட்யூபில் பகிர்ந்துள்ள அர்ச்சனா, ‘ஐ எம் பேக் டூ ஒர்க்’ என்று தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் விஜய் டிவி அர்ச்சனா.

  சன் டிவி-யில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுமமானவர் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், கலைஞர் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, கவனம் பெற்றார். இதையடுத்து விஜய் டிவி-யில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

  இந்நிலையில் கடந்த மாதம் அர்ச்சனாவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதையடுத்து தனது யூ-ட்யூபில் பேசிய அர்ச்சனா, தனக்கு தொடையில் 16 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் நீண்ட நேரம் நிற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

  அதோடு படப்பிடிப்புக்கு வந்தால் தொடர்ந்து 15-16 மணி நேரம் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், இப்போதைக்கு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில் தற்போது அர்ச்சனா படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தின் வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-ட்யூபில் பகிர்ந்துள்ள அர்ச்சனா, ‘ஐ எம் பேக் டூ ஒர்க்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் அர்ச்சனா கலந்துக் கொண்டது படமோ, சின்னத்திரை நிகழ்ச்சியோ இல்லை. அதுவொரு விளம்பர படம். இதில் அர்ச்சனாவுடன் இணைந்து ரோபோ சங்கரும் நடிக்கிறார்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: