சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக, தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகளுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இப்பொழுது சோஷியல் மீடியா மூலமாக எல்லோரிடமும் எளிதாக கனெக்ட் செய்ய முடிந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் மட்டுமே தோன்றி தன்னுடைய திறமையால் ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் அர்ச்சனா.
வீ.ஜே அர்ச்சனா பல ஆண்டுகள் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து, கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். இவருடைய மகளான சாராவும் ஒரு சில நிகழ்ச்சிகள் தன்னுடைய அம்மாவுடன் தொகுத்து வழங்கியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சன் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்தவர் அர்ச்சனா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கி அதன் மூலம் மிகப்பெரிய பிரபலமான தொகுப்பாளினியாக மக்கள் மனதில் இடம்பிடித்தார். ஒரு ஆர்ஜேவாக தன்னுடைய கேரியரைத் தொடங்கிய அர்ச்சனா வீஜேவாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read : விஜய்யின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம்
ஜீ தமிழில் ரியாலிட்டி மியூசிக் ஷோ மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக துவங்கினார் அர்ச்சனா. அர்ச்சனாவின் மகளும் தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பதை நிரூபிக்கும் வகையில் அம்மாவுடன் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டினார். இதற்கிடையில் விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராகக் கலந்து கொண்டார் அர்ச்சனா. இவருடைய ஸ்ட்ரேட்டஜி வேலைக்கு ஆகவில்லை, அன்பு என்ற ஆயுதத்தை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற கணிப்பு தவறாக, இவர் ஏகப்பட்ட எதிர்ப்பை சம்பாதித்தார்.
பிறகு மீண்டும் விஜய் டிவியிலேயே மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை மற்றும் ஒரு சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து மக்கள் மனதில் இடம் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் அர்ச்சனா மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஒரு தொகுப்பாளினியாக அர்ச்சனாவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம் உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கானவர்கள் அவரைப் பின்தொடர்வது மூலமாக அதைத் தெரிந்து கொள்ளலாம்.
Also Read : த்ரிஷாவை உத்திரபிரதேச போலீசாக்கிய அரசியல் கட்சியினர்...!
சோஷியல் மீடியாவில் இவர் குடும்பத்தினருடன் பகிரும் புகைப்படங்கள் மற்றும் ஏகப்பட்ட வீடியோக்களுக்கு வரவேற்பு உள்ளது. இவருடைய மகள் சாராவும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அர்ச்சனாவிற்கு மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்து ஒரு சில வாரங்கள் ஓய்வில் இருந்தார். பின்னர், கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி திரைப்படமான டாக்டர் திரைப்படத்தில் அம்மா மகள் பாத்திரத்திலேயே அர்ச்சனா மற்றும் சாரா நடித்தனர்.
View this post on Instagram
அர்ச்சனா மீண்டும் ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளராக செல்லப் போகிறார் என்ற செய்தி வெளிவந்த நிலையில், அது தவறு என்று உறுதி செய்யும் விதமாக விஜய் டிவியின் அம்மா-மகள் இருவருமே இணைந்து மற்றொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக தகவல் உறுதியாகி உள்ளது. இவர்கள் இருவருமே சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழில் சேர்ந்து தொகுத்து வழங்கியுள்ளனர். விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இவர்கள் இருவரும் பங்கேற்கப் போகிறார்கள் என்பது பற்றிய தகவல் விரைவில் வெளியிடப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Archana biggboss, Archana chandhoke, Archana zara, Reality Show