ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

90s கிட்ஸ் களுக்கு பிடித்த பழைய அர்ச்சனாவின் வைரல் புகைப்படம்..

90s கிட்ஸ் களுக்கு பிடித்த பழைய அர்ச்சனாவின் வைரல் புகைப்படம்..

பிக்பாஸ் அர்ச்சனா

பிக்பாஸ் அர்ச்சனா

Bigg Boss Archana : அர்ச்சனாவும் அவரது மகள் ஸாராவும் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

90s கிட்ஸ் என்பது வெறும் ஒரு வார்த்தை அல்ல; அது ஒரு எமோஷன்! இப்போது தான் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார்னு ஆயிரத்தெட்டு பொழுதுபோக்கு தளங்கள் உள்ளன. எப்போது, எதை, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், ரசிக்கலாம், சிரிக்கலாம். ஆனால் 90களில் பொதிகை, ராஜ் டிவி, சன் டிவி மட்டும் தான் பெரும்பாலானோர்களின் பிரதான பொழுதுபோக்கு. நமக்கு பிடிச்ச ஒரு பாடலை மறுபடியும் பார்க்க எத்தனை நாள் ஆகுமென்றே தெரியாது. அதிலும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அதை ஒரே ஒருமுறை மட்டும் தான் பார்க்க முடியும், மறுஒளிபரப்பாகும் வரை..

இது வெறும் ஒரு சாம்பிள் தான். 90s கிட்ஸ்களுக்கு இப்படி பல எமோஷன்கள் உள்ளன. அந்த எமோஷன்களில் பலரும் பலவகையில் பங்கு கொண்டுள்ளனர்; அதில் விஜே அர்ச்சனாவும் ஒருவர். சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று - காமெடி டைம். இந்த ஷோவை நகைச்சுவை நடிகர் சிட்டி பாபுவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கிய விஜே அர்ச்சனா, பல 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜே ஆவார்!

Also read : இதை ஏன் செஞ்சேன்னு எனக்கே தெரியல.. 6 மாத வலியை பகிர்ந்த சமந்தா!

 தன் கேரியரில் பல வெற்றிகளை சந்தித்த அர்ச்சனா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் சேனல் வழியாக ரீ-என்ட்ரி கொடுத்தார், பேசாமல் அங்கேயே இருந்து இருக்கலாம், தேவை இல்லாமல் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4-இல் கலந்து கொண்டார். வேற லெவலில் மக்களின் மனதை கொள்ளை கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில், நெகட்டிவ் விமர்சனங்களையும், மோசமான ட்ரோல்களையுமே சம்பாதித்தார். போதாக்குறைக்கு, ஜீ தமிழ் சேனலுக்கும் மீண்டும் போக முடியாது. எனவே விஜய் டிவியிலேயே செட்டில் ஆகி விடலாம் என்கிற எண்னத்தில் மிஸ்டர் அன்ட் மிசர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் சீசன் 3-இந்த நடுவராக இருக்கிறார்.

Also read : வேலைக்காரன் சீரியல் காமெடி சீன் மேக்கிங்- வைரல் வீடியோ

 மறுகையில், டிவி சேனல்களை மட்டுமே நம்பி இருக்க கூடாது என்று நினைத்தாரோ, அல்லது தன் மகள் ஸாராவிற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து தர வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார், அர்ச்சனா. அதன் வழியாக தன் மகள் ஸாராவை மெல்ல மெல்ல ஒரு பிரபலமாக்கி வருகிறார்.

அர்ச்சனாவும் ஸாராவும் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர். சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்திலும் இவ்விருவரும் நடித்து அசத்தினர். இருந்தாலும் கூட இவர்களின் யூட்யூப் வீடியோக்கள் தான் மிகவும் பிரபலம். சமூக ஊடங்களின் வழியாக அவ்வப்போது ஸாராவின் மீது அன்பு மழை பொழிய மறக்காத மிகவும் அர்ச்சனா, ஸாராவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில், 90ஸ் கிட்ஸ்கள் பார்த்து ரசித்த அர்ச்சனாவின் பழைய முகத்தையும், தொப்பி அணிந்து கொண்டு க்யூட் ஆக சிரிக்கும் சிறிய வயது ஸாராவையும் நம்மால் பார்க்க முடிகிறது.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Archana biggboss