• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புதிய திரைப்படத்தில் பிரபல ஹீரோவுக்கு தங்கையான பிக்பாஸ் அனிதா சம்பத்!

புதிய திரைப்படத்தில் பிரபல ஹீரோவுக்கு தங்கையான பிக்பாஸ் அனிதா சம்பத்!

அனிதா சம்பத்

அனிதா சம்பத்

அண்ணன் - தங்கை சென்டிமென்டை மையமாக வைத்து தயாராக உள்ள படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடிக்கிறார் அனிதா சம்பத்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் மக்களை கவர தவறுவதில்லை. அது சீரியலாக இருந்தாலும் சரி அல்லது ரியாலிட்டி ஷோக்களாக இருந்தாலும் சரி. சின்னத்திரை ரசிகர்களின் நாடி துடிப்பாக இருந்து வரும் விஜய் டிவியில் சீரியல்கள் அல்லது நகைச்சுவை கலந்த ரியாலிட்டி ஷோக்கள் என பலவற்றில் தோன்றும் கலைஞர்கள் பலர் ஒரு கட்டத்தில் வெள்ளித்திரைக்கு சென்று அங்கும் பிரகாசிக்கின்றனர். விஜய் டிவி-யின் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸின் 5-ஆம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்றவர் அனிதா சம்பத்.

    பிரபல சேனலான சன் டிவி-யில் செய்தி வாசிப்பாளராக ஏற்கனவே மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆகி இருந்த அனிதா சம்பத், இந்த ஷோவில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். அனிதா சம்பத் சன் டிவியில் செய்தி வாசிப்பாளர் வேலையில் சேருவதற்கு முன்னர் பாலிமர் டிவி மற்றும் நியூஸ் 7 சேனலிலும் பணியாற்றி இருக்கிறார். இது தவிர சன் டிவி-க்கு சென்ற பின் அந்த சேனலில் திங்கள் - சனி வரை காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வணக்கம் தமிழாவில் தொகுப்பாளராகவும் வேலை பார்த்து உள்ளார். தொடர்ந்து சேனல்களில் வேலை பார்த்து கொண்டே காலா, சர்க்கார், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளர் கேரக்டர்களில் நடித்துள்ளார்.

    ஆதித்ய வர்மா, அவசரம், தர்பார், இரும்பு மனிதன், டேனி உள்ளிட்ட திரைப்படங்களிலும் தோன்றி இருக்கிறார். இவர் தனது நீண்ட நாள் காதலரான பிரபாகரனை கடந்த 2019-ல் ஆகஸ்ட் மாதம் 25 அன்று திருமணம் செய்து கொண்டார். இதனிடையே பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத், தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். பிரபல நடிகர் விமல் ஹீரோவாக நடிக்கும் குடும்ப கதையம்சம் மற்றும் அண்ணன் - தங்கை சென்டிமென்டை மையமாக கொண்ட திரைப்படத்தில் தான் தற்போது அனிதா சம்பத் நடிக்க இருக்கிறார்.

    டைரக்டர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், கமில் ஜே அலெக்ஸ் ஒளிப்பதிவில், காட்வின் இசையமைப்பில், வத்சன் வீரமணி மற்றும் மார்ட்டின் நிர்மல் குமார் ஆகிய இருவரின் திரைக்கதையில் தயாராகி வரும் புதிய திரைப்படத்தில் அனிதா சம்பத் நடிக்க இருக்கிறார். அண்ணன் - தங்கை சென்டிமென்டை மையமாக வைத்து தயாராக உள்ள இந்த படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடிக்கிறார் அனிதா சம்பத்.

    இந்த புதிய திரைப்படத்தை உதய் புரோடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார்.விமல்,அனிதா சம்பத், பாண்டியராஜன் இவர்களை தவிர ஆடுகளம் நரேன், காமெடி நடிகர் பாலசரவணன், நடிகை தீபா உள்ளிட்ட பலர் இடம்பெற்று உள்ளனர். தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான டைம்லூப் திரைப்படமான ஜாங்கோவில் நாயகியின் தோழியாக அனிதா சம்பத் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: