Home /News /entertainment /

Anitha Sampath: கணவரை விவாகரத்து செய்கிறாரா பிக் பாஸ் அனிதா சம்பத்?

Anitha Sampath: கணவரை விவாகரத்து செய்கிறாரா பிக் பாஸ் அனிதா சம்பத்?

கணவருடன் அனிதா சம்பத்

கணவருடன் அனிதா சம்பத்

பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா, எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கணவரை விவாகரத்து செய்வதாக பரவிய தகவலுக்கு இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார் பிக் பாஸ் அனிதா சம்பத்.

    சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார்.

    நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது. அதிலிருந்து மீண்ட அவர், வழக்கம் போல தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொள்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா, எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் அனிதா சம்பத் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக செய்தி வெளியானது. இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்து, விளக்கம் கொடுத்துள்ளார் அனிதா.

    ”கூடவே இருந்தியே செவ்வாழை மொமென்ட்.. கன்டென்ட் இல்லனுனு இந்த லெவலுக்கு இறங்கிட்டாங்களா காஸிப் பேஜஸ்.. டெய்லி யூட்யூப்ல ஒன்னா விலாக் போடுறதெல்லாம் அட்மின் பாக்குறதில்ல போல” எனத் தெரிவித்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss

    அடுத்த செய்தி