Home /News /entertainment /

பிக் பாஸ் தாமரைச் செல்வி வீட்டிற்கு சென்ற பிரபலம் - லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

பிக் பாஸ் தாமரைச் செல்வி வீட்டிற்கு சென்ற பிரபலம் - லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

தாமரைச் செல்வி

தாமரைச் செல்வி

நாடகக் கலைஞரான தாமரைச்செல்வி பிக் பாஸ் 5-ம் சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

    பிக் பாஸ் போட்டியாளர் தாமரைச்செல்வியின் வீட்டிற்கு சென்றுள்ளார் சக போட்டியாளர் அனிதா சம்பத்.

    சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார். பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த அனிதா டிவி நிகழ்ச்சிகள், யூ-ட்யூப் சேனல் என பிஸியானார்.

    பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி-யில் ஒளிபரப்பானது. அதில் வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி பெரியசாமி, கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    Beast, KGF 2: பீஸ்ட், கே.ஜி.எஃப் 2... தமிழக வசூலில் டாப் இதுதான்!

    நாடகக் கலைஞரான தாமரைச்செல்வி பிக் பாஸ் 5-ம் சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். பிக் பாஸ் வீட்டில் 98 நாட்கள் தாக்குப் பிடித்த தாமரை அதன் பிறகு எலிமினேட் ஆனார். பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.




    இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தமரைச்செல்வியின் வீட்டுக்கு அனிதா சம்பத் சென்றிருக்கிறார். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்டப் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனிதா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி