வாய்ப்பு தருவதாக தவறான பாதைக்கு அழைத்த நபர்... சரியான பதிலடி கொடுத்த அனிதா சம்பத்

பிக் பாஸ் அனிதா சம்பத்

Bigg Boss Anitha Sampath: தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் ஹாசனுடன் இணைந்து நடனமாடி வருகிறார் அனிதா சம்பத்.

 • Share this:
  பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்பவர்களை விமர்சித்திருக்கிறார் பிக் பாஸ் அனிதா சம்பத்.

  சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார்.

  நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது. அதிலிருந்து மீண்ட அவர், வழக்கம் போல தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொள்கிறார். தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் ஹாசனுடன் இணைந்து நடனமாடி வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Bigg Boss Anitha Sampath criticize, Bigg Boss Anitha Sampath, anitha sampath, anitha sampath Prabhakaran, anitha sampath salary, anitha sampath instagram, anitha sampath latest news, anitha sampath husband job, anitha sampath phone number, anitha sampath news, anitha sampath family photos, anitha sampath husband, anitha sampath marriage photos, பிக் பாஸ் அனிதா சம்பத், அனிதா சம்பத், அனிதா சம்பத் பிரபாகரன், அனிதா சம்பத் சம்பளம், அனிதா சம்பத் இன்ஸ்டாகிராம், அனிதா சம்பத் சமீபத்திய செய்தி, அனிதா சம்பத் கணவர் வேலை, அனிதா சம்பத் தொலைபேசி எண், அனிதா சம்பத் செய்தி, அனிதா சம்பத் குடும்ப புகைப்படங்கள், அனிதா சம்பத் குடும்ப புகைப்படங்கள், அனிதா சம்பத் திருமண படங்கள்
  பிக் பாஸ் அனிதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி


  இதற்கிடையே சமீபத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, இளம்பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு ஒருவர் அழைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வந்த அந்த செய்தியை, அனிதா சம்பத்திற்கு அந்தப் பெண் பகிர்ந்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனிதா சம்பத், ”தோழி இந்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பினார். தயவு செய்து இந்த மாதிரி ஆட்களை நம்பாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: