எல்லோரும் கண் தானம் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய பிக் பாஸ் பிரபலம், தானும் கண் தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் நிறைவுப் பெற்றது. இதன் டைட்டில் வின்னராக நடிகர் ஆரியும், ரன்னராக பாலாஜி முருகதாஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து தங்களின் குடும்ப விழாக்களில் ஒன்று கூடி மகிழ்ந்தனர் பிக் பாஸ் பிரபலங்கள்.
இதையடுத்து கடந்த 4 சீசன்களிலும் பங்கேற்றவர்களை ஒன்று திரட்டி, பிக் பாஸ் ஜோடிகள் எனும் நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணனும், நகுலும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், கடந்த 4-ம் சீசன் போட்டியாளரான
அனிதா சம்பத், 2-ம் சீசன் போட்டியாளர் ஷாரிக் ஹாசனுடன் இணைந்துள்ளார். இவர்களின் நடனம் எப்போதும் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், இந்த வாரம் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற ரவுண்டில் பார்வையற்றவர்களைப் போல நடனமாடியிருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கண்களை மூடிக்கொண்டு அவர்கள் ஆடிய நடனத்தைப் பார்த்த
நடுவர்கள், அனிதாவையும், ஷாரிக்கையும் வெகுவாக பாராட்டுகிறார்கள். அதோடு, எல்லாரும் கண் தானம் செய்ய வேண்டும் என்று கூறிய அனிதா, முதலாவதாக தானும்
கண் தானம் செய்வதாக பிக் பாஸ் ஜோடிகள் மேடையில் அறிவிக்கிறார். இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், முழு நிகழ்ச்சியைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.