ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இன்று தான் கடைசி நாள்... பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு கிளம்புகிறாரா கமல்? இனிமேல் இவர் தானாம்!

இன்று தான் கடைசி நாள்... பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு கிளம்புகிறாரா கமல்? இனிமேல் இவர் தானாம்!

பிக் பாஸ் கமல்

பிக் பாஸ் கமல்

அடுத்த வாரம் முதல் பிக் பாஸ் அல்டிமே நிகழ்ச்சியை கமலுக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க போவதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றன

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு நடிகர் கமல்ஹாசன் விலக இருப்பதாகவும் இனிமேல் வேறொரு பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

  இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது ஸ்டார் விஜய். இந்தியில் ஒருமுறை கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் கண்களை விரிவடைய செய்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக் பாஸ் முதல் அறிமுகம் என்பதால் மிகப் பெரிய ஹிட் அடித்தது. டி.ஆர்.பியில் கலக்கியது. ஜூலி, ஓவியா, சினேகன் போன்றவர்களால் நிகழ்ச்சி மேலும் சுவாரசியமானது. அதை விட முக்கியம், இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் பலமானது. அவரின் கண்டிப்பு கலந்த மரியாதை, போட்டியாளர்களை பதில் பேச விடாமலே தப்பை புரிய வைப்பது, தமிழிலே பேசி நிகழ்ச்சியை கொண்டு போவது என  வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே கிடைக்கும் கமலின் தரிசனம் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது.

  இதையும் படிங்க.. மகனை பார்த்து கதறி அழுத சர்வைவர் விஜயலட்சுமி!

  இவரைத் தவிர வேர யாரும் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக கொண்டு செல்ல முடியாது என்றனர் ரசிகர்கள். அதன் பின்பு அடுத்தடுத்த சீசன்களை கமலே தொகுத்து வழங்கினார். இதுவரை பிக் பாஸ் 5 சீசன்களை கமல் வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளார். பிக் பாஸ் சீசன் 5ல் நடுவில் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது அந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் அதுவும் எதிர்மறையான பல விமர்சனங்களை சந்தித்து இருந்தது. ரம்யா கிருஷ்ணன் தெலுங்கிலும் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

  இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதை மக்கள் அதிகம் விரும்பினாலும் அவர் அரசியலுக்கு வந்த பிறகு அது எதிர்மறையான பல விமர்சனங்களையும் சந்தித்து இருந்தது. ”அரசியல் ஒண்ணும் பிக் பாஸ் ஷோ இல்லை” என்றெல்லாம் கமல்ஹாசன் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் ரசிகர்களுக்காக பிக் பாஸில் கமல்ஹாசன் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார்.

  இதையும் படிங்க.. சன் டிவி சுந்தரி சீரியலுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை.. தாங்க முடியாத சந்தோஷத்தில் கேப்ரில்லா!

  இந்நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் வகையில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு கமல்ஹாசன் விலக இருப்பதாகவும் தீவிரமாக அரசியல் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. மொத்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டே கமல் விலகுகிறாரா அல்லது தற்போது ஒடிடியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு மட்டும் விலகுகிறாரா? என எந்த விரிவான தகவலும் கிடைக்கவில்லை.  அடுத்த வாரம் முதல் இந்த பிக் பாஸ் அல்டிமே நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க போவதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றன. அதே சமயம் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. கமல் தரப்பில் இருந்தும் இந்த தகவலை உறுதி செய்யவில்லை. ஏனென்றால் இது போல பலமுறை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு போக இருப்பதாக வதந்திகள் பரவி இருக்கின்றன.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Kamal hassan, Vijay tv