Home /News /entertainment /

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கு - பிக் பாஸ் அக்‌ஷராவிடம் அமலாக்கத்துறை பல மணிநேரம் விசாரணை

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கு - பிக் பாஸ் அக்‌ஷராவிடம் அமலாக்கத்துறை பல மணிநேரம் விசாரணை

அக்‌ஷரா ரெட்டி

அக்‌ஷரா ரெட்டி

அவர் தனது பெயரை அக்‌ஷரா ரெட்டி என மாற்றியது மட்டுமின்றி, முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    பிக் பாஸ் அக்‌ஷரா ரெட்டியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் விஜய் டிவி-யில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 5 தமிழ்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்களில் அக்‌ஷரா ரெட்டியும் ஒருவர். 84-வது நாளில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் நன்றாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியிலும் கலந்துக் கொண்டார்.

    இந்நிலையில் 2013-ஆம் ஆண்டு நடந்த தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அக்ஷராவை அமலாக்க துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவில் உள்ள கோழிக்கோடு அமலாக்கத்துறை அலுவலகத்தில் பல மணி நேரம் அக்‌ஷரா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் விசாரணையின் முடிவு தெரியவில்லை.

    மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு செக் வைத்த லதா ரஜினிகாந்த்?

    தவிர அக்‌ஷராவின் உண்மையான பெயர் ஷ்ரவ்யா சுதாகர் என்றும், தங்கக் கடத்தல் வழக்கு கேரளாவை உலுக்கியபோது அவர் மாடலிங்கில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தங்கக் கடத்தலில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டு ஷ்ரவ்யாவும் விசாரணை வளையத்துக்குள் வந்தாராம். பின்னர் அவர் தனது பெயரை அக்‌ஷரா ரெட்டி என மாற்றியது மட்டுமின்றி, முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    பூவே உனக்காக சீரியலுக்கு குட் பை சொன்ன பூவரசி - ரசிகர்கள் அதிர்ச்சி

    பிக் பாஸில் இருந்து வெளியேறிய அக்‌ஷரா, சக ஹவுஸ்மேட் வருணுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி