Home /News /entertainment /

Bigg Boss Tamil 5 | பிக் பாஸில் உச்சகட்ட கோபத்தில் அக்‌ஷரா.. ரெட் கார்டுக்கு வாய்ப்பு இருக்கா?

Bigg Boss Tamil 5 | பிக் பாஸில் உச்சகட்ட கோபத்தில் அக்‌ஷரா.. ரெட் கார்டுக்கு வாய்ப்பு இருக்கா?

பிக் பாஸ்

பிக் பாஸ்

எனக்கு சத்தமாக பேசினால் பிடிக்காது, அப்படி பேசுபவர்களை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கும் என கூறிய அக்ஷ்ராவா இவ்ளோ ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது 11 போட்டியார்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார்.

    ஆனால் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தினமும் டாஸ்குகள் வழங்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விலகுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதன்படி நடந்த முதல் டாஸ்கில் சிபி வெற்றி பெற்று நாமினேஷன் லிஸ்டில் இருந்து தன்னை காப்பற்றியுள்ளார். நேற்று நடைபெற்ற இரண்டாவது டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்றுள்ளார். இதனால் நிரூபிற்கும் நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நாமினேஷன் லிஸ்டில் பிரியங்கா, ராஜூ, வருண், அக்‌ஷரா, தாமரை, அமீர், சஞ்சீவ், பாவனி, அபினய் ஆகிய 9 பேர் உள்ள நிலையில் இவர்களில் அடுத்தடுத்து வெற்றி பெற போவது யார்? இறுதியாக யாரெல்லாம் நாமினேஷன் லிஸ்டில் இருப்பது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

    Also Read : Bigg Boss : மரியாதையாக பேசுங்கள்.. அக்‌ஷராவுக்கு வார்னிங் கொடுத்த பிரியங்கா!

    இந்தநிலையில், இன்று ஒரு டாஸ்க் நடப்பதும், அதில் ராஜு - பிரியங்கா - அக்ஷ்ரா இடையே மோதல் நடைபெறும் காட்சிகள் தான் இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களிலும் உள்ளது. இன்று வழங்கப்படும் டாஸ்கில், தாய கட்டையில் ஹவுஸ்மேட்ஸின் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். 3 பஸ்ஸர் அடித்த பின்பு அதில் யாருடைய முகம் மேலே இருக்கிறதோ அவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார் என பிக் பாஸ் அறிவிக்கிறார். அதன்படி அனைவரும் டாஸ்கை விளையாடி வருகின்றனர்.

    அப்போது ராஜூ தாயக் கட்டை மீது ஏறி அமர்ந்து கொள்கிறார். அதில் அக்‌ஷரா முகம் மேலே இருப்பதால் கடுப்பான அவர், நீ இப்படி அமர்ந்து கொண்டால் எப்படி விளையாட முடியும்? என கேட்கிறார். அதற்கு ராஜு, ”நீ விளையாட வேண்டாம் சும்மா இரு” என நக்கலாக கூறுகிறார். இதனையடுத்து கோபமாக அமர்ந்திருக்கும் அக்‌ஷரா, ராஜு அண்ணா அமர்ந்திருப்பதால் நான் சும்மா இருக்கேன், வேறு யாராவதாக இருந்தால் நான் அவரை கீழே இழுத்து போட்டிருப்பேன் என்கிறார். பின்னர் ராஜூவை பார்த்து என்னுடன் பேசாதே ராஜு, என் வாழ்க்கையில் இதற்கு பின்னர் உன்னுடன் எப்போதும் பேச மாட்டேன் என சத்தியம் செய்து ஆங்கிலத்தில் கூறுகிறார். இதனை பார்த்த பிரியங்கா, தமிழில் பேசுங்கள் என்கிறார். இதனால் அக்‌ஷரா - பிரியங்கா இடையே வாக்குவாதங்கள் நடைபெறுகிறது.



    இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், அக்ஷ்ரா ஆக்ரோஷமாக தாய கட்டை மீது தட்டுகிறார். இதனை பார்த்து அருகில் இருந்த தாமரை அலற, இதெல்லாம் வேறு எங்காவது செய், சும்மா காமெடி செய்யாமல் என ராஜு கூறுகிறார். இதனை தொடர்ந்து பாத்ரூம் ஏரியாவில் வருணிடம் பேசும் அக்‌ஷரா, நான் ராஜுவிடம் பேசி கொண்டிருக்கிறேன், வேறு வேலையே இல்லையா? பிரியங்காவிற்கு, சீரியஸாக நான் பேசும் போது கூட நான் நடுவர் நான் கூறுவதை தான் கேட்க வேண்டும் என்கிறார் என கோபமாக பேசும் காட்சிகள் உள்ளது. எனக்கு சத்தமாக பேசினால் பிடிக்காது, அப்படி பேசுபவர்களை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கும் என கூறிய அக்ஷ்ராவா இவ்ளோ ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதனால் இன்றைய டாஸ்க் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி