Home /News /entertainment /

பிக்பாஸ் அல்ட்டிமேட்: நடிகர் விஜய் போட்டோ பிரின்ட்டான டி-சர்ட்டை அணிந்த நடிகை!

பிக்பாஸ் அல்ட்டிமேட்: நடிகர் விஜய் போட்டோ பிரின்ட்டான டி-சர்ட்டை அணிந்த நடிகை!

அபிராமி

அபிராமி

சின்னத்திரையில் மட்டுமே டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வந்த பிக்பாஸ் ஷோவை வேறு ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது பிக்பாஸ். ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல விறுவிறுப்பான சீரியல்கள், வித்தியாசமான மற்றும் கலகலப்பான ஷோக்களை ஒளிபரப்பி ரசிகர்களின் மத்தியில் தனி இடம் பிடித்துள்ள ஸ்டார் விஜய் டிவி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்பி வருகிறது. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்த 5 சீசன்களையுமே உலக நாயகன் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கி உள்ளார்.

இதுவரை சின்னத்திரையில் மட்டுமே டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வந்த பிக்பாஸ் ஷோவை வேறு ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். இதற்காக OTT பிளாட்ஃபார்மை தேர்வு செய்தனர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 முடிந்த சில நாட்களிலேயே கடந்த ஜனவரி 30 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் (Disney+ Hotstar) தொடங்கியது பிக்ஸ்பாஸின் OTT வெர்ஷனான பிக்பாஸ் அல்ட்டிமேட் (Bigg Boss Ultimate).

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் லைவ் ஸ்ட்ரீமிங் என்ற அடிப்படையில் இந்த புதிய பிக்பாஸ் OTT வெர்ஷன் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே இதுவரை ஒளிபரப்பான அனைத்து பிக்பாஸ் சீசன்களிலும் பங்கேற்ற முன்னாள் போட்டியாளர்கள் இந்த Bigg Boss Ultimate ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று உள்ளனர். பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி வெங்கடாசலம், தாமரை செல்வி, நடிகர் தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், நடிகை சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி பெரியசாமி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் தற்போது பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அபிராமி பிக் பாஸ் வீட்டிற்குள் சிகிரெட் பிடிக்கும் வீடியோ வெளியாகி வைரலான நிலையில் அவர் தற்போது நடிகர் விஜய் புகைப்படம் போட்ட டி சர்ட் அணிந்திருப்பதும் வைராகி வருகின்றது.



சமீபத்தில் இதில் நடைபெற்ற முதல் நாமினேஷனில் நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இதில் வனிதா, அபிநய் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய மூவர் டேஞ்சர் ஜோனில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also read... பிரபாஸ் படத்தின் வெளியீட்டால் சிக்கலில் உதயநிதி ஸ்டாலின்...!

நோட்டா, களவு, நேர்கொண்டபார்வை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள மற்றும் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற அபிராமி வெங்கடாசலம் தற்போது பிக்பாஸ் அல்ட்டிமேட்டில் இருக்கிறார். இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இவர் நடிகர் தளபதி விஜயின் போட்டோ பிரின்ட் செய்யப்பட்ட டி சர்ட்டை அணிந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து நடிகை அபிராமி தீவிர விஜய் ரசிகராக இருப்பாரோ என்று சோஷியல் மீடியாவில் விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Abirami

அடுத்த செய்தி