பிக் பாஸ் பிரபலம் அபினய் தனது மனைவி அபர்ணாவை விவாகரத்து செய்து விட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியான நிலையில், இந்த விஷயம் குறித்து தெளிவுப்படுத்தியிருக்கிறார் அபினய்.
ஜெமினி கணேசன் - சாவித்ரி அவர்களின் பேரன் அபினய். இவர் கணித மேதை ராமனுஜரின் வாழ்க்கை வரலாறான ராமானுஜன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வாய்ப்புகள் சரியாக அமையாத அபினய் விவசாயத்தில் ஆர்வத்தை செலுத்தினார்.
இந்நிலையில் கடந்த அக்டோபரில் ஆரம்பமான பிக் பாஸ்நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். அந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், குறைந்த வாக்குகள் பெற்றதால், பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆனார் அபினய்.
எப்போதும் பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின்போது அபினய்யிடம், ராஜூ நேரடியாக பாவனியை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறக்காமல் இருந்தது, பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
நடிகர் விஜய்யா இது? வைரலாகும் சின்னத்திரை நடிகரின் திருமண போட்டோ!
அதோடு தனது சமூக வலைதள பக்கத்தில் அபர்ணா அபினய் என்றிருந்த பெயரை அபர்ணா வரதராஜன் என அபினய்யின் மனைவி மாற்றியது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியது. இதற்கிடையே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அபினய், சில வாரங்களில் அதிலிருந்து எலிமினேட் ஆனார்.
எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களுடன் கலந்துரையாடிய அபினய்யிடம், ரசிகர் ஒருவர் 'உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அபினய், 'இந்த செய்தியை கேட்டு நான் முதலில் ஷாக் ஆனேன். இது தவறான நபர்களால் பரப்பப்படுகிறது. இதில் உண்மை இல்லை' எனக் கூறி, மனைவியுடனான தனது படத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.